Skip to main content
சிறாரின் பாதுகாப்பு உறுதிச் செய்யப்படும்!

 

 

இணைய பாதிப்புகளிலிருந்து சிறாரைப் பாதுகாக்கும் தனது முயற்சியை மேம்படுத்துகிறது மலேசியா! 

 

அதற்காக தமது தரப்பு உலகின் பல்வேறு நாடுகளுடனான ஒத்துழைப்பை வலுப்படுத்தி வருவதாக தொடர்புத்துறை அமைச்சர் DS Fahmi Fadzhil தெரிவித்தார்.

 

நாளுக்கு நாள் சிக்கலாகி வரும் இலக்கவியல் சூழலில் இருந்து குழந்தைகள் பாதுகாப்பாக இருப்பதை உறுதிப்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

 

இந்நிலையில் கட்டுப்பாட்டாளர்கள் மற்றும் அதிகார வரம்புகளுக்கு இடையே நெருக்கமான ஒத்துழைப்பு வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

 

------

 

பஹாங் Maranநில் உள்ள மருத்துவமனையின் குழந்தைகள் வார்ட் கூரை தீப்பிடித்த எரிந்ததில் யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை!

 

11 பிள்ளைகள் உட்பட அனைத்து 17 நோயாளிகளும் பாதுகாப்பாக இருப்பதாக மாவட்ட காவல் துறை தெரிவித்தது.

 

------

 

இன்று தொடங்கி அடுத்த ஒரு வாரத்திற்கு தீபகட்பத்தில் எரிபொருளின் விலை உயர்கிறது!

 

ரோன்97, உதவித் தொகை வழங்கப்படாத ரோன்95 மற்றும் டீசல் விலை முறையே 25 சென் உயருவதாக நிதியமைச்சு அறிவித்துள்ளது.

 

------ 

 

இந்தோனேசியாவில் வேகமெடுத்து வரும் காட்டுத்தீயை அணைக்க உதவ மலேசியா தயார்!

 

அந்நாட்டு அரசின் அனுமதிக்காக காத்திருப்பதாக அரசாங்க பேச்சாளர் Datuk Seri Fahmi Fadzil கூறினார்.

 

------ 

 

22 லட்சத்து 40 ஆயிரம் ரிங்கிட் மதிப்புடைய கஞ்சாவை கடத்தியதற்காக இந்தியா டெல்லி அனைத்து விமான நிலையத்தில் பிடிப்பட்டார் மலேசிய பெண்மணி ஒருவர்.

 

Kuala Lumpur அனைத்துலக விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட அவர், டெல்லியில் பயணிகள் சோதனையின் போது சிக்கினார்.

RAAGA Aaha Siranta Isai!