Skip to main content
சமூக ஊடகங்களுக்கு புதிய கெடு !

 

சமூக ஊடகத் தளங்கள், தங்களது இணையப் பாதுகாப்புத் திட்டங்களை, டிசம்பர் 28-ஆம் தேதிக்குள், தொடர்பு பல்லூடக ஆணையத்திடம் சமர்ப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது !

அதைத் தொடர்ந்து, அடுத்தாண்டு ஜனவரி முதல் வயது சரிபார்ப்பு நடைமுறைகள் அமல்படுத்தப்படவுள்ளதாக, தொடர்புத் துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

அந்தச் சரிபார்ப்பில், பயனர்களின் வயது மட்டுமே உறுதிப்படுத்தப்படும் என்றும், அடையாளம் சரிபார்க்கப்படாது என்பதால், போலிக் கணக்குகளைக் குறைக்க அது உதவாது என்றும் அமைச்சு விளக்கியது.

போலிக் கணக்குகளைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்து, மேலும் ஆய்வுகளும் கலந்துரையாடல்களும் தேவைப்படுவதாகவும், அது குறிப்பிட்டது.

----------

வெள்ள நிவாரண மற்றும் மீட்புப் பணிகளுக்காக, 5,000-க்கும் மேற்பட்ட ஆயுதப்படையினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர் !

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பயன்படுத்துவதற்காக, நூற்றுக்கணக்கான தரை மற்றும் நீர்வழி வாகனங்களும் தயாராக இருக்கின்றன.

வடகிழக்குப் பருவமழையை முன்னிட்டு, நாட்டின் பல பகுதிகளில், இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

--------

இதனிடையே, எல் நினோ வானிலை மாற்றத்தால் ஏற்படக்கூடிய மீன் தட்டுப்பாட்டைச் சமாளிக்க, எட்டு மாதங்களுக்குப் போதுமான உறைந்த மீன்களைச் சேமித்து வைக்க, அரசாங்கம் திட்டமிட்டுள்ளது !

இந்த வானிலை மாற்றம், டிசம்பர் முதல் ஏற்படலாம் என எதிர்பார்க்கப்படுவதாக, விவசாய உணவுப் உத்தரவாத அமைச்சு தெரிவித்துள்ளது.

---------

இவ்வேளையில், சிலாங்கூரில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர் !  

பேராக்கில் 300-க்கும் அதிகமானோர், அப்பேரிடரால் பாதிக்கப்பட்டு, PPS மையங்களில் தங்கியுள்ளனர்.  

---------

கெடா சுங்கை பட்டாணியில், மனநல நோயாளிகளுக்கான பராமரிப்பு மற்றும் சிகிச்சை மையத்தில் தங்கியிருந்த ஒருவர், அங்கு தங்கிருந்த சக நபர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில், 6 நாட்களுக்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளார் !

RAAGA Aaha Siranta Isai!