Skip to main content
சமூக ஊடகப் பிரச்சாரங்களில் MCMC தலையிடாது !

வரவிருக்கும் மலாக்கா 16-ஆவது மாநில சட்டமன்றத் தேர்தலின் போது, சமூக ஊடகப் பிரச்சாரங்களில் மலேசிய தொடர்பு பல்லூடக ஆணையம் தலையிடாது !

அவ்வாறு தொடர்பு துறை அமைச்சர் Datuk Seri Fahmi Fadzil தெரிவித்துள்ளார்.

மாறாக, MCMC சமூக ஊடகத் தளங்களைத் தீவிரமாகக் கண்காணிக்கும் என அவர் கூறினார்.

மேலும், பொதுமக்களிடமிருந்து புகார்கள் கிடைத்தால் மட்டுமே சம்பந்தப்பட்ட பதிவுகள் குறித்து விசாரணை நிகழ்த்தி நடவடிக்கை எடுக்கப்படும் எம்றும் அவர் சொன்னார்.

மலாக்கா மாநிலத் தேர்தல் நவம்பர் 14-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், முன்கூட்டிய வாக்களிப்பு நவம்பர் 10-ஆம் தேதி நடைபெறும்.

--

சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளும் இன்று வழக்கம்போல் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதே சமயம், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாணவர்கள் முகக்கவசம் அணியுமாறு மாநில கல்வி துறை அறிவுறுத்தியுள்ளது.

கடந்த சில நாட்களாகப் பெய்த மழையால்,அம்மாநிலத்தில் நிலவிய புகைமூட்டம் பெருமளவில் நீங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

--

முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக், 5 கோடி ரிங்கிட் அபராதத்தை இதுவரை செலுத்தவில்லை என சட்டத்துறை அலுவலகம் தெரிவித்துள்ளது.

அபராதத்தைச் செலுத்துவதற்கு குறிப்பிட்ட காலக்கெடு எதுவும் நிர்ணயிக்கப்படாத நிலையில், அந்த முன்னாள் பிரதமர் அதனைச் செலுத்தும் வரை சிறைத் தண்டனையை அனுபவிக்க வேண்டும் என அது கூறியது.

--

Yaman னில் உள்ள மலேசியர்கள் தாமாக முன்வந்து அந்நாட்டை விட்டு வெளியேறுவதற்கான ஏற்பாடுகளை உடனடியாகச் செய்யுமாறு ஓமனில் உள்ள மலேசியத் தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.

ஏமனின் சில பகுதிகளில் தொடர்ந்து அதிகரித்து வரும் பதற்றம் மற்றும் ஆயுத மோதல்களைத் தொடர்ந்து அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், அந்நாட்டின் பாதுகாப்புச் சூழல் சீராகும் வரை ஏமனுக்கான பயணங்களை ஒத்திவைக்குமாறும் மலேசியர்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். 

RAAGA Aaha Siranta Isai!