
சபா மற்றும் சரவாக்கில் மோசமடைந்து வரும் புகைமூட்டம் காரணமாக, குறிப்பாக அங்குள்ள உயர்கல்வி நிலையங்கள், காற்றின் தரத்தைத் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் !
பல்கலைக்கழகங்கள், பலதொழில்நுட்பக் கல்லூரிகள் மற்றும் சமூகக் கல்லூரிகள், நிலைமையைத் தொடர்ந்து கண்காணித்து, அரசாங்கத்தின் உத்தரவுகளுக்கு இணங்க வேண்டும் என, உயர்கல்வி அமைச்சர் Datuk Seri Dr Zambry Abd Kadir தெரிவித்துள்ளார்.
மாநில அரசாங்கம் கல்வி நிலையங்களை மூட முடிவு செய்தால், அந்த முடிவை உயர்கல்வி அமைச்சு பின்பற்றும் என Zambry கூறினார்.
எனினும், இதுவரை வகுப்புகள் பாதிக்கப்படவில்லை என்றும், புகைமூட்டத்தால் பாதிக்கப்பட்ட உயர்கல்வி நிலையங்களுக்கு, தமதமைச்சு நெகிழ்வான அணுகுமுறையைப் பின்பற்றி வருவதாகவும், Zambry சொன்னார்.
---------
இதனிடையே, ஜொகூரில் காற்றுத் தரக் குறியீடான API அளவு 200-ரைத் தாண்டினால், பள்ளிகள் மூடப்படும் !
மோசமடைந்து வரும் காற்றின் தரத்தைக் கருத்தில் கொண்டு, இந்த நடவடிக்கையை மேற்கொள்ளும் இரண்டாவது மாநிலமாக ஜொகூர் அமைந்துள்ளது. முன்னதாக அதையே சிலாங்கூர் தெரிவித்திருந்தது.
நேற்று ஜொகூரின் அனைத்து மாவட்டங்களிலும், API குறியீடு ஆரோக்கியமற்ற அளவில் பதிவாகியிருந்ததால், காற்றின் தரத்தை, மாநில அரசாங்கம் தீவிரமாகக் கண்காணித்து வருகிறது.
---------
பஹாங் Mentakab-பில் 2 வயது குழந்தை கடுமையாக நடத்தப்பட்ட விவகாரம் தொடர்பான காவல்துறை அறிக்கைக்காக, மகளிர் குடும்ப சமூக மேம்பாட்டு அமைச்சு காத்திருக்கிறது !
அதன் பின்னரே அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்க முடியும் என, அமைச்சு தெரிவித்துள்ளது.
அங்குள்ள குழந்தை பராமரிப்பு மையத்தில் அக்குழந்தை மோசமாக நடத்தப்பட்டதாகக் கூறப்படும் விவகாரம் தொடர்பில், அம்மையத்தின் ஊழியர் ஒருவர், 6 நாட்களுக்குத் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
--------
Negeri Sembilan-னில் உள்ள ஒரு வீட்டில், காவல்துறையால் சுட்டுக் கொல்லப்பட்ட ஆடவர், பல ஆண்டுகளாக, போதைப்பொருள் தயாரிப்பில் ஈடுபட்டு வந்த ஒரு கும்பலின் தலைவன் எனத் தெரியவந்துள்ளது !
அவர், பல தசாப்தங்களாக, தடைசெய்யப்பட்ட போதைப்பொருட்களை தயாரித்து வந்த அனுபவம் கொண்டவர் என புக்கிட் அமான் தெரிவித்துள்ளது.
--------
சிலாங்கூர் Subang Jaya-வில், கேளிக்கைப் பூங்காவில் நடந்த roller coaster விபத்து தொடர்பான முழுமையான விசாரணை அறிக்கை, இன்னும் 3 முதல் 4 மாதங்களில் தயாராகும் என எதிர்பார்க்கப்படுவதாக, காவல்துறை தெரிவித்துள்ளது !