
மக்கள், வீட்டு பொழுதுபோக்கிற்காக சட்டவிரோத ஒளிபரப்பு சாதனங்களை ஒருபோதும் பயன்படுத்தக்கூடாது !
இச்சாதனங்கள், கள்ள உள்ளடக்கங்களைப் பார்க்க வழிவகுப்பதோடு, சிறார்களை இணைய சூதாட்ட தளங்கள் உள்ளிட்ட, அநாகரீகமற்ற உள்ளடக்கங்கள் நோக்கி இழுத்துச் செல்லும் அபாயமும் உள்ளது என, FINAS தெரிவித்துள்ளது.
இச்சாதனங்களில், தனிப்பட்ட தரவுகளை திருடும் மென்பொருட்கள் உள்ளன; கூடவே தங்கள் உரையாடல்களை பதிவு செய்யும் திறனும் கொண்டிருக்கலாம் என அது பொதுமக்களை எச்சரித்தது.
--------
வெள்ளிக்கிழமை தொடங்கி, Plus நெடுஞ்சாலைகளில் வாகனங்கள் அதிகரிக்கலாம் !
2.2 மில்லியன்னுக்கும் மேற்பட்ட வாகனங்கள், அந்நெடுஞ்சாலைகளைப் பயணிக்கலாம் என, PLUS மலேசியா நிறுவனம் தெரிவித்துள்ளது.
பள்ளி விடுமுறையோடு சேர்த்து, ஹஜ் பெருநாள், விசாக தினம் மற்றும் பேரரசர் பிறந்தநாள் ஆகியவை தொடர்ந்து வருவதால், வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அந்நிறுவனம் சொன்னது.
---------
மற்ற செய்திகள் சுறுக்கமாக ;
மதிறுக்கக் குழந்தைகளுக்கான கல்விக் கட்டண உதவித் திட்டத்தின் விண்ணப்பங்கள், இம்மாதம் 15-ஆம் தேதி முதல், ஜூலை 15-ஆம் தேதி வரை திறக்கப்பட்டுள்ளது !
----------
மலாக்கா Alor Gajah-வில், கடந்த மாதம் பெண் e-hailing ஓட்டுநரை தாக்கியதாகச் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை, நான்கு பதின்ம வயதினரும் ஒப்புக்கொண்டுள்ளனர் !
--------
கெடா Kepala Batas-சில் காருக்குள் நபர் ஒருவர், பெண்ணின் கழுத்தில் குத்தப் பயன்படுத்தியதாக நம்பப்படும் ஒரு வகை கத்தியை, காவல்துறை கண்டுபிடித்துள்ளது !
---------
சிலாங்கூர் SHAH ALAM-மில், கட்டிடம் ஒன்றில் இருந்து கீழே விழுந்ததில், மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளார் !