Skip to main content
சுதந்திரம் சுலபமாகப் பெறப்பட்ட ஒன்றல்ல !

நாட்டின் வளர்ச்சிக்கு அஸ்திவாரமாக விளங்கும் ஒற்றுமையை நாட்டு மக்கள் பேண வேண்டும்!

சுதந்திரம் என்பது சுலபமாகப் பெறப்பட்ட ஒன்றல்ல;

அது முந்தையத் தலைமுறையினரின் தியாகங்களால் சாத்தியமான ஒன்று என பிரதமர் நினைவுக்கூர்ந்துள்ளார்.

அதே சமயம் சுதந்திரம் அடைந்த நாடு, முடிவுகளைச் சுயமாகத் தீர்மானிக்கும் உரிமையையும், சுயமரியாதைக் கொண்ட மக்களையும் கொண்டிருப்பதோடு, இறையாண்மை மிக்க நாடாகவும் விளங்குவதே என பிரதமர் வலியுறுத்தினார்.

இன்று நாடளவில் 69 வது தேசிய தினம் மிக விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.

--

இதனிடையே, 2026 தேசிய தினத்தை முன்னிட்டு, நேற்று நிகழ்ந்த பிரதமர் உரையில்  BUDI95 அடிப்படை ஒதுக்கீடு உட்பட 6 முன்முயற்சிகளை, பிரதமர் அறிவித்துள்ளார்.

பிக்கப் டிரக்குகள், ஜீப்கள் மாதிரியான டீசல் பயன்படுத்தும் வாகனங்களின் தகுதிபெறும் உரிமையாளர்கள், மாதத்திற்கு 400 லிட்டர் வரை BUDI டீசல் மானியத்தைப் பெறுவார்கள்.

மக்களின் வாழ்க்கைச் செலவீன அழுத்தத்தைக் குறைக்கும் வகையில்,அது நாளை முதல் அமலுக்கு வரும் என பிரதமர் கூறினார்.

மற்ற முன்முயற்சிகளில், அனைத்து வகையான பள்ளிகளின் பராமரிப்புக்கான நிதி ஒதுக்கீடு 1.5 பில்லியன் ரிங்கிட்டாக உயர்த்தப்பட்டுள்ளது.  

மேலும், இளைஞர்களுக்காக “AI for Rakyat” திட்டமும் திறக்கப்பட்டுள்ளது.  

--

சீனாவில் 36 மலேசியர்களும் நேபாளத்தில் 55 மலேசியர்களும் இன்னும் தொடர்பு கொள்ள முடியாத நிலையில் இருப்பதை Wisma Putra உறுதி செய்துள்ளது.  

சீனா Gyirong துறைமுக மண்சரிவில் காணாமல் போன 3 மலேசியர்களும், அந்த 36 பேரின் எண்ணிக்கையில் உள்ளவர்கள் என்பதையும் அது தெளிவுப்படுத்தியுள்ளது.  

முன்னதாக, நேபாளத்திற்கு 1 மில்லியன் டாலர் நிதியுதவி வழங்கப்படும் என பிரதமர் அறிவித்திருந்தார்.  

மேலும், தேடல் மற்றும் மீட்பு பணிகளுக்கு உதவ SMART குழுவை நேபாளத்திற்கு அனுப்பவும் அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

--

சுற்றுச்சூழல் துறையின் ஆகக் கடைசி தகவல் படி, சரவாக்கில் செரியன், சமரஹான், ஸ்ரீ அமன், கூச்சிங் என 4 பகுதிகளில் API குறியீடு 300க்கும் அதிகமான அபாயகரமான அளவில் பதிவாகியுள்ளது.  

Sarikei, Sibu Muka ஆகிய பகுதிகளில் காற்றின் தரம் மிகவும் ஆரோக்கியமற்ற அளவில் உள்ளது.  

இதனிடையே, சரவாக், சபா, லாபுவான், பேராக், கெடா, பினாங்கு மாநிலங்களை உள்ளடக்கிய 14 பகுதிகளில் API குறியீடு ஆரோக்கியமற்ற அளவில் இருக்கிறது. 

RAAGA Aaha Siranta Isai!