
சிலாங்கூர் பூச்சோங் Kinrara-வில், Cikgu Chandra வீட்டில் நிகழ்ந்த சதிநாச வேலை மற்றும் குற்ற மிரட்டல் நடவடிக்கைகள் தொடர்பில், காவல்துறை இன்னும் சில சந்தேக நபர்களுக்கு வலைவீசியுள்ளது !
அதன் தொடர்பான விசாரணை அறிக்கை நிறைவடைந்த பின்னர், அரச தரப்பு துணை தலைமை வழக்கறிஞரிடம் அது சமர்பிக்கப்படும் என அத்துறை NST-யிடம் கூறியது.
முன்னதாக Cikgu Chandra வீட்டில் இருந்த மூன்று கார்கள் மர்ம நபர்களால் எரியூட்டப்பட்டன.
அச்சம்பவம் தொடர்பில் 12 பேர் கைதான வேளை, எழுவர் காவல்துறை பிணையில் விடுவிக்கப்பட்டனர்.
----------
தாய்லாந்துக்கான பயணத்தை ஒத்திவைக்கும்படி, மலேசியர்கள் கேட்டுகொள்ளப்பட்டுள்ளனர் !
கடந்த இரு நாட்களாக அந்நாட்டில் பெட்ரோல் மற்றும் டீசல் தட்டுப்பாடு நிலவி வருவதே அதற்குக் காரணமாகும்.
---------
பஹாங்கில் சாலைகளில் சிகிரெட் துண்டுகளை வீசிய மூவருக்கு, 300 ரிங்கிட் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது ; அவர்கள் சமூக சேவை தண்டனையையும் அனுபவிப்பர் !
----------
மற்றொரு நிலவரத்தில், பஹாங்கில் நோன்புப் பெருநாள் காலத்தில், சாலை பயனர்களின் பாதுகாப்புக்காக, 200-க்கும் அதிகமான போக்குவரத்து அதிகாரிகள் பாதுகாப்புப் பணியில் இருப்பர் !
----------
இவ்வேளையில், ஹரி ராயாவை முன்னிட்டு நாளை தொடங்கி 6 நாட்களுக்கு, பினாங்கில் 1.5 மில்லியன் வாகனங்கள் நுழையும் என எதிர்பார்க்கப்படுவதாக, காவல்துறை தெரிவித்துள்ளது !
---------
மற்றொரு பக்கம், அப்பெருநாள் காலத்தில் போக்குவரத்து விதிமுறைகளை மீறுவோரைப் பிடிக்க, வடக்கு மற்றும் தெற்கை நோக்கி செல்லும் முக்கிய நெடுஞ்சாலைகளில், கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதாக, பொதுப்பணித்துறை அமைச்சு தெரிவித்துள்ளது !