Skip to main content
Dating செயலிகளை கட்டுப்படுத்த எண்ணமில்லை!

 

Dating செயலி பயனர்களுக்குக் கட்டாய அடையாளச் சரிபார்ப்பை அறிமுகப்படுத்தும் திட்டங்கள் எதுவும் இல்லை.

 

மாறாக பொது விழிப்புணர்வு, மற்றும் மோசடியை சுலபமாக அடையாளம் காணும் வழிமுறைகளை மேம்படுத்துவதில் தான் அரசாங்கம் கவனம் செலுத்த விரும்புவதாக, தொடர்புத்துறை துணை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

 

நாட்டில் தீவரமடைந்து வரும் மோசடிகளில் ஒன்றான காதல் மோசடிக்கு, அடையாள சரிபார்ப்பு ஒரு முழு தீர்வாக இருக்காது என அவர் NSTயிடம் கூறினார்.

 

கடந்த நான்காண்டுகளில் 460க்கும் மேற்பட்ட மலேசியர்களை உட்படுத்திய மோசடிச் சம்பவங்கள் பதிவாகியிருக்கின்றன.

 

மூன்று கோடியே 27 லட்சம் ரிங்கிட் நட்டத்தை உட்படுத்திய அம்மோசடிகளில் பெரும்பாலானவர்கள் dating செயலியில் சந்தித்தவர்களை நம்பியே ஏமாந்துள்ளதாக  தகவல் வெளியிட்டிருந்தது.

 

-----

 

புதிய அடிப்படை மாதச் சம்பளமாக மூவாயிரத்து நூரு ரிங்கிட்டை நிர்ணயிக்கலாம்! 

 

உயர்ந்து வரும் வாழ்க்கைச் செலவீனம், வீட்டு நிர்வாகம், போக்குவரத்து உள்ளிட்ட அம்சங்களை சீர்த்தூக்கிப் பார்த்து அந்த பரிந்துரையை முன்வைத்துள்ளது மலேசிய தொழிற்சங்க காங்கரஸ்.

 

ஆயிரத்து 700 ரிங்கிட் நடப்பு மாத்ச் சம்பளத்தை மறு ஆய்வு செய்வதாகவும், அதனை உயர்த்த பரிசீலிப்பதாகவும், மனிதவள அமைச்சு முன்னதாகக் கூறியிருந்தது.

 

-----

 

நாட்டின் சில இடங்களைப் புகை மூட்டம் சூழ்ந்திருப்பதை அடுத்து, ஆஸ்துமா, மேல் சுவாசக்குழாய் தொற்று ஆகியவை தீவிரமடைந்து வருகிறது!

 

ஆஸ்துமா 259 விழுக்காடு உயர்வு கண்டிருக்கும் வேளை, சுவாசக்குழாய் தொற்று 124 விழுக்காடு உயர்ந்திருப்பதாக, சுகாதார அமைச்சர் தெரிவித்திருக்கின்றார்.

 

கடந்த இரு வாரங்களில், வெப்ப வாதம், சோர்வு உள்ளிட்ட வெப்பம் சார்ந்த நோய்கள் தொடர்பில் 90 சம்பவங்கள் பதிவானதாகவும் அவர் கூறினார்.

 

-----

 

இதனிடையே காற்றின் தரம் மோசமடைந்ததால் சரவாக்கில் மூடப்பட்டிருந்த அனைத்துப் பள்ளிகளும் இன்று மீண்டும் வழக்கம் போல் செயல்படவிருக்கின்றன!

 

API குறியீடு மோசமானதால் கடந்த வாரம் அம்மாநிலத்தில் கிட்டத்தட்ட அறுநூரு பள்ளிகள் மூடப்பட்டன.

 

------

 

அக்டோபர் 9ஆம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவிருக்கும் 2027 வரவு செலவு அறிக்கையில் மக்களின் வாழ்க்கைச் செலவீன சுமையைக் குறைக்கும் முயற்சிகள் விரிவாக்கம் காணும்!

 

13ஆவது மலேசியா திட்டத்திற்கு உதவும் வகையில், முதலீடுகளை ஈர்க்கும் திட்டங்களும் இம்முறை பட்ஜட்டில் முக்கியத்துவம் பெறவிருப்பதாக, அரசாங்க பேச்சாளர் Datuk Fahmi Fadzil தெரிவித்துள்ளார்.

RAAGA Aaha Siranta Isai!