
மலாக்கா Durian Tunggal துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் மரண விசாரணை நடத்தக் கோரி, காவல்துறை இன்னும் ஓரிரு நாட்களில் விண்ணப்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது !
இச்சம்பவம் தொடர்பான காவல்துறை விசாரணை முழுமையாக நிறைவடைந்துள்ளதாக புக்கிட் அமான் தெரிவித்துள்ளது.
மரண விசாரணை நடத்துவதற்கான தேதி நிர்ணயிக்கப்பட்டதும், அது மலாக்காவில் நடைபெறும் என Bukit Aman மத்திய குற்றப் புலனாய்வுத் துறை இயக்குநர் Datuk M. Kumar தெரிவித்துள்ளார்.
விசாரணையின்போது, அச்சம்பவத்தில் சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரும் சாட்சியளிக்க அழைக்கப்படுவர் என்றும் அவர் கூறினார்.
கடந்தாண்டு நவம்பரில், செம்பனைத் தோட்டத்தில் நடைபெற்ற காவல்துறை நடவடிக்கையின்போது, 3 ஆடவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
அப்போது, சந்தேக நபர்கள் என நம்பப்பட்ட அவர்களில் ஒருவர், பாராங் கத்தியால் காவல்துறை அதிகாரி ஒருவரைத் தாக்கியதால், தற்காப்புக்காக அதிகாரிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக, முன்னதாக செய்திகள் வெளிவந்திருந்தன.
--------
ஜொகூர் Batu Pahat-டில் உள்ள ஆற்றொன்றில், கடந்த வாரம், வலையில் சுற்றப்பட்ட நிலையில் மிதந்தபடி சடலமாகக் கண்டெடுக்கப்பட்டவரை கொலை செய்ததாகச் சந்தேகிக்கப்படும் ஐவரின் தடுப்புக் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது !
கொலையுண்டவர், 39 வயது தொழிலதிபராவார்.
அந்த ஐந்து சந்தேக நபர்கள், நாளை முதல் ஒரு வாரத்துக்கு தடுப்புக் காவலில் வைக்கப்படுவர்.
முன்னதாக, அவர்கள், ஏழு நாட்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த நிலையில், அந்தக் கால அவகாசம் இன்றுடன் முடிவடைந்தது.
--------
மற்றொரு பக்கம், ஜொகூர் Gelang Patah-வில், கடந்த வாரம், அபாயகரமான முறையில் வாகனத்தைச் செலுத்தி, உயிரிழப்பை ஏற்படுத்திய ஆடவருக்கு, 20-ஆயிரம் ரிங்கிட் அபராதத்துடன் கூடிய ஆறாண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது !
அவ்விபத்தில் உயிரிழந்த மோட்டார்சைக்கிளோட்டுநரின் மனைவிக்கு, நான்காயிரம் ரிங்கிட் நஷ்ட ஈடு வழங்கும்படியும், சிறை வாசம் பிடிக்கும் ஆடவருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
---------
2027-ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் இடம்பெறவுள்ள, மேம்பாட்டுத் திட்ட பரிந்துரைகளை பரிசீலிக்கும் பணியைப், பொருளாதார அமைச்சு இறுதிக்கட்டத்துக்கு கொண்டு வந்துள்ளது !
அத்திட்டங்கள் தொடர்பான பரிந்துரைகள், இம்மாத மத்தியில், நிதி அமைச்சிடம் சமர்ப்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
--------
நிதித் துறையில் AI பயன்பாட்டைப் பொறுத்தவரை, 85 விழுக்காட்டுடன், உலகின் முன்னணி மூன்று சந்தைகளில் மலேசியாவும் இடம்பெற்றுள்ளது; இது 73 விழுக்காடான உலகளாவிய சராசரியைவிட அதிகமாகும் !