
El Nino பருவத்தின் போது, நாடு 37.5 பாகை செல்சியஸ் வரை வெப்பத்தை எதிர்கொள்ள நேரிடலாம் !
அக்காலத்தில், மழை குறைந்து வெப்பம் அதிகரிப்பதே அதற்குக் காரணம் என, இயற்கை வளங்கள் மற்றும் சுற்றுச்சூழல் நிலைத்தன்மை அமைச்சு தெரிவித்துள்ளது.
அந்த பருவம், ஜூலை தொடங்கி அடுத்தாண்டு, முதல் காலாண்டு வரை நீடிக்கும் என எதிர்பாரக்கப்படுகிறது.
இதனிடையே, வானிலை மாற்றங்கள் குறித்து, பொதுமக்கள் எப்போதும் விழிப்புடன் இருக்கும்படி, முன்னதாக துணைப் பிரதமரும் கேட்டுக்கொண்டிருந்தார்.
---------
பகடிவதை தடுப்பு நடுவர் மன்றம் அதிகாரப்பூர்வமாக அமைக்கப்பட்டதை, மலேசிய மனித உரிமை ஆணையம் வரவேற்றுள்ளது !
இது, நாட்டில் பள்ளி மற்றும் கல்வி நிறுவனங்களில் பாதுகாப்பான கற்றல் சூழலை உருவாக்கும் முக்கிய நடவடிக்கையாக இருப்பதாக, SUHAKAM தெரிவித்துள்ளது.
அம்மன்றத்தின் கீழ், பகடிவதை செய்பவர்கள் 18 வயதுக்கு கீழ்பட்டவர்களாக இருந்தால், அவர்களின் பெற்றோர்களும் நடவடிக்கையை எதிர்கொள்வர்.
---------
இந்த ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில், மொத்தம் 388 பாலியல் துன்புறுத்தல் சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன !
கடந்தாண்டு பதிவான எண்ணிக்கையைக் காட்டிலும், இது அதிகமே என மகளிர், குடும்ப, சமூக மேம்பாட்டு அமைச்சு தெரிவித்துள்ளது.
---------
ஜொகூர் சட்டமன்ற தேர்தலின் போது, முக்கியமான 39 பகுதிகளில் கிட்டத்தட்ட 12-ஆயிரம் காவல்துறை அதிகாரிகள் பணியமர்த்தப்படவுள்ளனர் !
அங்கு ஜூலை 11-ஆம் தேதி தேர்தல் நடைபெறும் வேளை, Negeri Sembilan-னில், ஆகஸ்ட் 1-ஆம் தேதி நடைபெறுகிறது.
---------
ஜொகூர் Batu Pahat-டில், மது போதையில் வாகனமோட்டியதாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை, ஆடவர் ஒருவர் ஒப்புக்கொண்டுள்ளார் !