Skip to main content
எண்ணெய் விலை உயர்வுக்கு எரிபொருள் பற்றாக்குறை மட்டுமே காரணம் அல்ல !

 உள்ளூர் சந்தை எண்ணெய் விலை உயர்வுக்கு எரிபொருள் பற்றாக்குறை மட்டுமே காரணம் அல்ல ! 

 

மாறாக, கப்பல் போக்குவரத்து, அவற்றுக்கான காப்பீடு உள்ளிட்ட பல்வேறு செலவுகள் அதிகரித்திருப்பதே அதற்குக் காரணம் என பிரதமர் விளக்கமளித்துள்ளார். 

 

முன்னதாக, அமெரிக்க-ஈரான் போர்நிறுத்த அறிவிப்பைத் தொடர்ந்து உலகளாவிய எண்ணெய் விலைகள் குறைந்தபோதிலும், மானியம் இல்லாத RON95 ரக பெட்ரோல் விலை லிட்டருக்கு 40 சென் அதிகரித்து 4 ரிங்கிட் 27 சென்னாக ஆனது. 

 

-- 

 

ஈரான், இஸ்ரேல், அமெரிக்கா இடையேயான மோதலால் ஏற்பட்ட உலகளாவிய எரிசக்தி நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு மூன்றிலிருந்து 5 ஆண்டுகள் வரை ஆகலாம்! 

அதனை, கத்தார் நாட்டுத் தலைவர் நேரடியாக தெரிவித்ததாக பிரதமர் DSAI தெரிவித்துள்ளார். 

டீசல் விலை உயர்வு உள்ளிட்ட வாழ்க்கைச் செலவு அழுத்தங்களை எதிர்கொண்டாலும், மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில், மலேசியாவில் நிலைமை இன்னும் கட்டுப்பாட்டில்தான் உள்ளது என பிரதமர் வலியுறுத்தினார். 

-- 

லெபனான் மீது இஸ்ரேல் நிகழ்த்திய பயங்கரவாதத் தொடர் தாக்குதல்களை ஐ.நா. கண்டித்துள்ளது ! 

  

அமெரிக்க-ஈரான் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்ட சில மணி நேரங்களிலேயே, சியோனிச ஆட்சியின் தாக்குதல்கள் 10 நிமிடங்களில் 100 இடங்களைத் தாக்கியுள்ளன. 

  

இஸ்ரேலின் அந்த வான்வழித் தாக்குதல்களில் குறைந்தது 250 பேர் கொல்லப்பட்டதாகவும், 8,000-க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் முன்னதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. 

 

-- 

 

இதனிடையே, ஈரானுக்கு ஆயுதங்கள் வழங்கும் நாட்டிலிருந்தும் இறக்குமதி செய்யப்படும் அனைத்துப் பொருட்களுக்கும் 50 விழுக்காடு வரி விதிக்கப்படும் என அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார். 

 

-- 

 

சிலாங்கூர், கோம்பாக்கில் உரிமம் இல்லாத சிறார் நல காப்பகத்தின் உரிமையாளர் ஒருவர், ஐந்து சிறுவர்களை உடப்டுத்திய15 சிறார் பாலியல் குற்றச்சாட்டுகளை ஒப்புக் கொண்டுள்ளார். 

அவருக்கு அதிகபட்சமாக 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படலாம். 

-- 

திரங்கானு கெமாமானில் மூன்று மாணவர்கள் வெப்ப வாதத்தால் பாதிக்கப்பட்டதாக சமூக ஊடகங்களில் பரவிய கூற்றுகளை மாநில கல்வித் துறை மறுத்துள்ளது. 

RAAGA Aaha Siranta Isai!