
ஜொகூர் செகாமாட் மருத்துவமனை உட்பட, நாட்டில் எந்தவொரு சுகாதார மையமும் மூடப்படாது என்பதை, சுகாதார அமைச்சு உறுதியளித்துள்ளது !
Negeri Sembilan Rompin மற்றும் Gemas பகுதிகளில் இருந்து மகப்பேறு மற்றும் மகளிர் நோய் தொடர்பான நோயாளிகளை பரிந்துரைத்து அனுப்புவது மட்டுமே தற்காலிகமாக நிறுத்தப்பட்டதே ஒழிய, அம்மருத்துவமனையின் மொத்த செயல்பாடுகளும் அல்ல என, அமைச்சு தெளிவுப்படுத்தியது.
முன்னதாக, அம்மருத்துவமனை, அடுத்த மாதம் 1-ஆம் தேதியோடு தனது செயல்பாடுகளை நிறுத்திக்கொள்ளும் என, வதந்திகள் கிளம்பின.
-----------
அண்மையில் சிலர் மலையேறச் சென்று காணாமல் போன சம்பவங்களை வைத்து, பேராக் மாநிலம் ஒரு முடிவை எடுத்துள்ளது !
அம்மாநிலம் முழுவதும் உள்ள அதிக ஆபத்துள்ள மலைப் பாதைகளில், ஒருநாள் நடைப்பயணங்கள் மற்றும் குறுகிய தூர மலையேறும் நடவடிக்கைகளுக்கு, உடனடித் தடை விதிக்கப்படுவதாக, மாநில வனத்துறை தெரிவித்துள்ளது.
மலையேறுபவர்களின் பாதுகாப்பை அடிப்படையாகக் கொண்டு அது முடிவானதாக, அத்துறை கூறியது.
--------
பேராக் ஈப்போவில், கார் கண்ணாடியை, தலைகவசத்தால் அடித்து சேதப்படுத்தியதாகக் கூறப்படும் நபரை, காவல்துறை தேடி வருகிறது !
ஒழுங்கற்ற முறையில் வாகனத்தை ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநரான சந்தேக நபர், பாதிக்கப்பட்டவரின் வாகனத்தின் மீது மோதவிருந்த நிலையில், அவர் ஒலி எழுப்பியதைத் தொடர்ந்து, இந்தச் சம்பவம் நிகழ்ந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
----------
Negeri Sembilan Port Dickson-னில், 4 வயது சிறுவன், நீச்சல் குளத்தில் மூழ்கி உயிரிழத்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது !
--------
சமூக ஊடகத்தில் வெளியான காணொலி ஒன்றில், மியான்மார் நாட்டு நபர் எனக் கூறப்படும் ஒருவர், தன்னிடம் MyKad இருப்பதாகக் கூறியதை அறிந்த, தேசிய பதிவுத் துறை, காவல்துறையிடம் புகார் செய்துள்ளது !