Skip to main content
எரிபொருள் விற்பனை விலையை குறைக்க வேண்டுமா ?

 

எரிபொருள் விலை நிர்ணயக் கொள்கையை பிரதமர் தற்காத்துப் பேசியுள்ளார் !

புத்ராஜெயா, ஏற்கனவே ஆண்டுதோறும் 40 பில்லியன் ரிங்கிட் அளவில், மானியங்களுக்காக செலவிடுவதாக அவர் விளக்கமளித்துள்ளார்.

இதனால், நாட்டின் நிதி நிலைத்தன்மையை பாதிக்காமல், எரிபொருள் விற்பனை விலையை மேலும் குறைக்க முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தற்போது மானியங்கள் வழங்கப்பட்டு வரும் நிலையிலும், எரிபொருள் விலையை மேலும் குறைக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்துள்ள நிலையில், பிரதமர் அவ்வாறு கூறினார்.

----------  

வெளியில் சுற்றித் திரியும் நாய்கள் உள்ளிட்ட கைவிடப்பட்ட விலங்குகளின் நலன் தொடர்பான நிர்வாகத்தை வலுப்படுத்தவும், செல்லப்பிராணி உரிமையாளர்களின் சுமையைக் குறைக்கவும், கூட்டரசு வரவு செலவுத் திட்டத்தில் சிறப்பு நிதி ஒதுக்கீடு மற்றும், வரி விலக்கு ஊக்குவிப்புகளை வழங்கும் முன்மொழிவை பரிசீலிக்க, அரசாங்கம் தயாராக உள்ளது !

சிறப்பு நிதி ஒதுக்கீடு இல்லாததால், பெரும்பாலான அரசு சாரா அமைப்புகளும், விலங்கு காப்பகங்களும் தன்னார்வ அடிப்படையில் செயல்பட்டு வருவதாக, பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இதனால், கைவிடப்பட்ட விலங்குகளை பராமரிக்கவும், மீட்கவும் தேவையான செலவுகளை, அவை சொந்த நிதியைப் பயன்படுத்தி மேற்கொண்டு வருவதாகவும் அது சொன்னது.

-------------

ஜொகூர் பாருவில் உள்ள உணவகமொன்றில், Spain மற்றும் அர்ஜென்டினாவுக்கு இடையிலான கால்பந்து திருவிழா இறுதியாட்ட நேரலை முடிந்த பிறகு, கைகலப்பில் ஈடுபட்டதாகக் கூறப்படும் 12 பேரை, காவல்துறை கைதுச் செய்துள்ளது !

கைதானவர்கள், அவ்வுணவகத்தில், நாற்காலிகளை வீசி சண்டையில் ஈடுபட்டதைக் காட்டும் காட்சிகள் அடங்கிய காணொலி ஒன்று, பரவலானது.

அந்த 12 பேரில் மூவருக்கு, ஏற்கனவே குற்றப் பதிவுகள் இருப்பது விசாரணையில் தெரியவந்ததாகவும் அத்துறை கூறியது.

---------

பினாங்கில் கோவிட்-19, HFMD எனும், கை-கால்-வாய் புண் நோய் மற்றும் டெங்கி காய்ச்சல் சம்பவங்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக, மாநில சுகாதாரக் குழுத் தலைவர் தெரிவித்துள்ளார் !

இந்த மூன்று நோய்களும் தற்போது கட்டுப்பாட்டில் இருப்பதாகவும் அவர் கூறினார்.

சில பகுதிகளில் கோவிட்-19 தொற்று நோய் அதிகரித்து வருவதாக தகவல்கள் பரவி வந்த போதிலும், அத்தொற்று எண்ணிக்கையில் திடீர் உயர்வு எதுவும் காணப்படவில்லை, என்றாரவர்.

---------

மற்றொரு பக்கம், அம்மாநிலத்தில் உள்ள ஒரு பேரங்காடி தூய்மை குறைபாடு காரணமாக, தற்காலிகமாக மூட உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது !

---------

ஆகஸ்டு 1-ஆம் தேதி நடைபெறும், Negeri Sembilan தேர்தலை முன்னிட்டு, பிரச்சார நடவடிக்கைகளுக்காக, இதுவரை 107 அனுமதிப் பத்திரங்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளதாக, காவல்துறை தெரிவித்துள்ளது !

அங்கு நடைபெறும் அனைத்து அரசியல் நிகழ்ச்சிகள் மற்றும் பிரச்சார நடவடிக்கைகளும், சட்டத்துக்கு உட்பட்டு நடைபெறுகின்றனவா என்பதை, அத்துறை தொடர்ந்து கண்காணிக்கும். 

RAAGA Aaha Siranta Isai!