
Global Sumud Flotila மனிதநேய குழுவைச் சேர்ந்த 24 மலேசியர்களை இஸ்ரேல் தடுத்து வைத்துள்ளதாகத் தகவல் கிடைத்துள்ளது.
மலேசிய நேரப்படி நேற்றிரவு எட்டு மணி வாக்கில், அவர்களை ஏற்றிச் சென்ற ஒன்பது கப்பல்கள், Cyprus பகுதியில் இஸ்ரேலிய படையால் இடைமறிக்கப்பட்டதாகத் தகவல் கூறுகிறது.
தடுத்து வைக்கப்பட்டவர்கள் தற்போது இஸ்ரேலிய சிறைக் கப்பல் ஒன்றில் தடுத்து வைக்கப்பட்டு, பின்னர் விசாரணைக்காகக் கரைக்குக் கொண்டு செல்லப்படுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.
------
PPR குடியிருப்புகளின் வாடகையை கட்டங்கட்டமாக உயர்த்த பரிசீலிக்கின்றது சிலாங்கூர் மாநில அரசு!
அந்த வீடமைப்புத் திட்டத்தின் வசதிகளை மேம்படுத்தவும் பராமரிக்கவும் அப்பணம் பயன்படுத்தப்படும் என மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் தெரிவித்தார்.
------
Setiawangsa நாடாளுமன்றத்தில் எல்லா மேம்பாட்டு மற்றும் பொது வசதிகளை தரமுயர்த்தும் வேலைகளும் தொடரப்படும்!
Setiawangsa நாடாளுமன்ற உறுப்பினர் பொறுப்பிலிருந்து விலகுவதாக Nik Nazmi Nik Ahmad வெளியிட்ட அறிவிப்பு, அப்பணிகளை எவ்விவத்திலும் வதிக்காது என, குவாலாலும்ப்பூர் மாநகர் மன்றத் தலைவர் தெரிவித்துள்ளார்.
------
Telegram செயலியில் தன்னை ஒரு பெண்ணாகக் காட்டிக் கொண்ட நபரிடம் ஏமாந்த 18 வயது இளைஞன்,அறுநூரு 66 ரிங்கிட்டைப் பறிகொடுத்துள்ளான்.
தனது ஆபாசப் படங்களையும் காணொலிகளையும் இணையத்தில் பதிவேற்றிவிடாமல் இருக்க, அப்பையனை மிரட்டி அந்நபர் மூவாயிரத்து 800 ரிங்கிட் கேட்டது தொடக்க கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
------
சிலாங்கூர் செப்பாஙில், எரிபொருள் விலை தொடர்பில் சமூக ஊடகங்களில் போலி தகவல்களைப் பரப்பியதற்காக, மாது ஒருவருக்கு Sessions நீதிமன்றம் நாலாயிரம் ரிங்கிட் அபராதம் விதித்து தீர்ப்பளித்தது.