Skip to main content
Hantavirus பரவுகிறது ; KKM கண்காணிப்பு !

 

ஹாண்டா வைரஸ் தொற்று பரவலுடன் தொடர்புடைய கப்பல் சம்பவத்தைத் தொடர்ந்து, சுகாதார அமைச்சு, உலகளாவிய மற்றும் சுற்றியுள்ள நாடுகளின் நிலைமைகளை தொடர்ந்து கண்காணித்து வருகிறது !

நிலைமை தற்போது கட்டுப்பாட்டுக்குள் இருந்தாலும், எல்லை பாதுகாப்பு மற்றும் சுகாதார அமைப்பு, மிக உயர்ந்த நிலையில் இருக்க, இந்த கண்காணிப்பு அவசியம் என அமைச்சு தெரிவித்துள்ளது.

சம்பந்தப்பட்ட கப்பலில் எந்த மலேசியரும் இல்லை.

எனினும், சிங்கப்பூரில் இருவர் அத்தொற்றுக்கான பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

எனவே,  அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறிந்து கண்காணிக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

---------

உலகளாவிய நெருக்கடிகளை எதிர்கொள்ள, ஆசியான் உணவு பாதுகாப்புத் திட்டம் உருவாக்க வேண்டும் என பிரதமர் Datuk Seri Anwar Ibrahim முன்மொழிந்துள்ளார் !

நெருக்கடி காலங்களில் விரைவான ஒருங்கிணைப்பை உறுதி செய்ய, உணவு கையிருப்பு முறைகள், உடனடியாக ஆராயப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

தற்போதைய ஆற்றல் நெருக்கடி, உணவு பாதுகாப்பை நேரடியாக பாதிக்கிறது; உலகளாவிய தடைகள் நீடித்தால், உற்பத்தி குறைவு மற்றும் நீடித்த விலை உயர்வு, அடுத்த ஆண்டிலும் தொடரக்கூடும் என, பிலிப்பின்சில் நடைபெறும் 48-வது ஆசியான் உச்சநிலை மாநாட்டின் போது, அவர் எச்சரித்தார்.

--------

நாடு தற்போது மழைக்கால மாற்றக் கட்டத்தை எதிர்கொள்வதால், மாலை மற்றும் இரவு வேளைகளில், அடிக்கடி இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என கணிக்கப்பட்டுள்ளது !

மார்ச் 29-ஆம் தேதி தொடங்கிய இந்த நிலை, மேம் வரை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இக்காலகட்டதில், திடீர் வெள்ளம், மரம் விழும் சம்பவங்கள் போன்ற பேரிடர்கள் ஏற்படலாம் என, மலேசிய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

----------

கெடா பாலிங்கில், லாரி ஒட்டுநர் போதைப்பொருள் உட்கொண்டு, காரொன்றை மோதித் தள்ளியதில், அதிலிருந்த ஐந்து மாத ஆண் குழந்தை உயிரிழந்துள்ளது !

அந்த லாரி ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார்.

--------

ஹஜ் பெருநாளை நிர்ணயிக்க, இம்மாதம் 17-ஆம் தேதி பிறை பார்க்கப்படுவதாக, அரச முத்திரை காப்பாளர் தெரிவித்துள்ளார் !

RAAGA Aaha Siranta Isai!