
மலேசியாவில் Hantavirus தொற்று பரவும் அபாயம் மிகவும் குறைவாகவே உள்ளதாக, சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது !
அண்டை நாடுகளில் ஒரு சுற்றுலா கப்பல் மூலம் இந்த வைரஸ் பரவியதாகக் கூறப்பட்ட நிலையில், மலேசியர்கள் யாரும் இதுவரை பாதிக்கப்படவில்லை என, அவ்வமைச்சு கூறியது.
இருப்பினும், பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
எலிகளின் சிறுநீர் மற்றும் கழிவுகள் மூலம் இந்த வைரஸ் பரவக்கூடும் என்பதால், வீடுகளையும் சுற்றுப்புறத்தையும் தூய்மையாக வைத்துக்கொள்ளும்படி, பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
முன்னதாக, உலகளாவிய மற்றும் சுற்றியுள்ள நாடுகளின் நிலைமைகளை, தமைதமைச்சு தொடர்ந்து கண்காணித்து வருவதாக அது தெரிவித்திருந்தது.
இந்தோனேசியாவில் இரண்டு Hantavirus சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூரிலும், இருவர் அத்தொற்றுக்கான பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.
---------
ஹஜ் பெருநாள் மற்றும் பள்ளி விடுமுறையை முன்னிட்டு, இம்மாதம் 22-ஆம் தேதி தொடங்கி, ஜூன் 7-ஆம் தேதி வரை, கூடுதல் 186 ETS மற்றும் EMU Plus சேவைகளை, KTMB நிறுவனம் அறிவித்துள்ளது !
பயணிகள் நெரிசலைச் சமாளிக்க, அந்த கூடுதல் சேவைகளில் 58-ஆயிரத்துக்கும் மேற்பட்ட இருக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
இன்று நண்பகல் தொடங்கி, அதற்கான டிக்கெட்டுகள் விற்பனையாகின்றன.
---------
பஹாங்கில் மாரான், Jerantut, Temerloh-விலும், கிளாந்தானில், Jeli மற்றும் Pasir Mas-சிலும், முதற்கட்ட வெப்ப எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது !
அப்பகுதிகளில் தொடர்ந்து 3 நாட்களுக்கு வெப்பம், 35 முதல் 37 பாகை செல்சியஸ் வரை இருக்கும்.
---------
ஜொகூரில் 120 பேர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு, தற்காலிக துயர்துடைப்பு மையத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர் !
கெடாவில் 45 பேரும், மலாக்காவில் 21 பேரும், PPS மையங்களில் அடைக்கலம் நாடியுள்ளனர்.
---------
இதனிடையே, பேராக் Sungai Siput-டில், இன்று அதிகாலையில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில், குறைந்தது 10 வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளன !