ஹோர்முஸ் நீரிணை குறித்த உயர்மட்ட அனைத்துலக கலந்துரையாடலில் மலேசியா பங்கேற்கும் !
அதில் கலந்துக்கொள்ள French அதிபர் Emmanuel Macron,அழைப்பு விடுத்துள்ளதாக, பிரதமர் கூறினார்.
இன்று இரவு நடைபெறும் அக்கூட்டத்தில் மலேசியாவை பிரதிநிதித்து வெளியுறவு அமைச்சர் Datuk Seri Mohamad Hasan கலந்துகொள்வார்.
--
இதனிடையே, எரிபொருளை ஏற்றிச் செல்லும் 7 மலேசியக் கப்பல்களில் ஒன்று வந்து சேர்ந்துவிட்டதாகவும், மற்றொன்று நாட்டின் எல்லையை நெருங்கிக் கொண்டிருப்பதாகவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.
எஞ்சிய ஐந்து கப்பல்கள் இன்னும் ஹோர்முஸ் நீரிணையைக் கடக்காத நிலையில், அரசாங்கம் நிலைமையைக் கண்காணித்து வருவதாகவும் அவர் சொன்னார்.
--
மத்திய கிழக்கு மோதல்களால் பாதிக்கப்பட்ட அங்குள்ள மலேசிய மாணவர்களுக்கு, உள்ளூர் பல்கலைக்கழகங்களில் இடங்களை வழங்க உயர்கல்வி அமைச்சு தயாராக உள்ளது.
--
பேருந்து ஓட்டுநர் ஒருவர் பாதுகாப்பற்ற முறையில் வாகனத்தைச் செலுத்தியதாகக் காட்டும் காணொலி குறித்து நடவடிக்கைகள் எடுப்பதற்கு முன்பு சாலை போக்குவரத்து துறை அதனை சரிப்பார்க்கும்.
அதில், இரவு நேரத்தில் வாகனம் ஓட்டும்போது, ஓட்டுநர் தனது இருக்கையில் சாய்ந்தபடி, ஒரு கையை மட்டுமே பயன்படுத்தி பேருந்தை ஓட்டுகிறார்.
--
அசல் உரிமையாளரின் அனுமதியின்றி வாகனப் பதிவு எண்கள் மாற்றப்படுவது குறித்த புகார்களை விசாரித்து வருவதாக சாலை போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.
--
மடியில் பெண்ணைஅமர்த்தி கொண்டு பேருந்தை ஓட்டி வைரலான ஓட்டுநருக்கு, ஓராண்டு கால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
சம்பந்தப்பட்ட பெண்ணுக்கு 6 மாதக்கால சிறைத்தண்டனையும், தலா 5,000 ரிங்கிட் அபராதமும் விதிக்கப்பட்டது.
--
சிலாங்கூர், செந்தூலில் நேற்று LRT ரயில் நிலையக் கழிப்பறையில் பெண்ணைப் பின்தொடர்ந்த சந்தேக நபரைக் கைது செய்துள்ளது.