Skip to main content
ஹோர்முஸ் நீரிணையில் இராணுவ கப்பல்களுக்கு அனுமதி இல்லை !

ஈரான் ஹோர்முஸ் நீரிணையில் இராணுவ கப்பல்களுக்கு அனுமதி இல்லை ! 

அது,வர்த்தகக் கப்பல்களுக்காக மட்டுமே திறக்கப்பட்டுள்ளதாக, அந்நாட்டு வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது. 

என்றாலும், கப்பல்கள் அதற்கென ஒதுக்கப்பட்ட பாதுகாப்பான பாதைகளைப் பயன்படுத்துமாறும் அறிவுறுத்தியுள்ளது. 

பாதுகாப்பு உறுதி செய்யப்படாத நிலையில், அங்கு கப்பல் போக்குவரத்து இன்னும் குறைவாகவே உள்ளது. 

-- 

இதனிடையே,மத்திய கிழக்கு நாடுகளுக்கு பயணிக்கவிருக்கும் மலேசியர்களுக்கு புதுப்பிக்கப்பட்ட பயண வழிகாட்டி ஒன்றை வெளியிட்டுள்ளது, வெளியுறவு அமைச்சு! 

குறிப்பாக ஹஜ்ஜூ யாத்திரை பயணங்களை மேற்கொள்வோர்,பாதுகாப்பாக இருக்கவும் ராணுவ பகுதிகள் மற்றும் பொதுக் கூட்டங்களை தவிர்க்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். 

-- 

புதிய Mycard-களில்  புகைப்படம் இருக்காது என்றும், QR குறியீடு மட்டுமே இருக்கும் என்றும் கூறப்படும் கூற்றுகளைத் தேசியப் பதிவுத் துறை மறுத்துள்ளது.  

  

போலிச் செய்திகளைப் பரப்புவதை நிறுத்திவிட்டு, தேசியப் பதிவுத் துறையின் அதிகாரப்பூர்வ வலைத்தளங்களில் துல்லியமான தகவல்களைப் பெறுமாறு அது, பொதுமக்களுக்கு நினைவூட்டியது. 

 

-- 

இந்தோனேசியாவில்,கடந்த வாரம் தனியார் ஹெலிகாப்டர் ஒன்று விபத்துக்குள்ளானதில் உயிரிழந்த எட்டு பேரில் ஒருவர் மலேசியர் என்பதை  மலேசிய  வெளியுறவு அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது. 

அங்குள்ள மலேசியத் தூதரகம், உயிரிழந்தவரின் குடும்பத்தினருடன் இணைந்து, அவரது உடலை நாட்டுக்கு கொண்டு வரும்  ஏற்பாடுகளைச் செய்து வருவதாகவும் அ கூறியது. 

-- 

மெட்டா நிறுவனம் வரும்  திங்கட்கிழமை அன்று பெரிய அளவிலான முதல் கட்ட ஆட்குறைப்பைச் செயல்படுத்தத் திட்டமிட்டுள்ளது. 

 

RAAGA Aaha Siranta Isai!