Skip to main content
இளைஞர்கள் புதிய திறன்களைக் கற்பது அவசியம் !

 

வேகமாக மாறிவரும் இன்றைய வேலைவாய்ப்பு சூழலுக்கு ஏற்ப, இளைஞர்கள் புதிய திறன்களைக் கற்றுக்கொள்வது அவசியம் !

ஏற்கனவே உள்ள திறன்களை மேம்படுத்திக்கொள்வதிலும், அவர்கள் கவனம் செலுத்த வேண்டும் என Belia Mahir தலைவர் தெரிவித்துள்ளார்.

தற்போது கற்றுக்கொள்ளும் திறன்கள், அடுத்த சில ஆண்டுகளில் மாறக்கூடும் என்பதால், வாழ்நாள் முழுவதும், தொடர்ந்தால் போல் கற்றுக்கொள்ளும் மனப்பான்மையை, இளைஞர்கள் வளர்த்துக்கொள்ள வேண்டும், என்றாரவர்.

ஒன்றிணைந்து எதிர்காலத்திற்கான திறன்களை வளர்ப்போம் எனும் கருப்பொருளில், இன்று அனுசரிக்கப்படும் உலக இளைஞர் திறன் தினத்தை முன்னிட்டு, தேசிய TVET மன்ற உறுப்பினருமான அவர், இந்தக் கருத்தைத் தெரிவித்தார்.

---------

சிலாங்கூர் Semenyih-வில், தன்னை கடத்தும் முயற்சி நடந்ததாகக் கூறி, பொய்யான காவல் புகார் அளித்ததாக சந்தேகிக்கப்படும், 16 வயது மாணவி குறித்த விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது !

விசாரணையில், அம்மாதிரியான ஒரு சம்பவமே நடக்கவில்லை என தெரியவந்துள்ளதை அடுத்து, அந்த பொய் புகாருக்கான விசாரணை நடைபெறுவதாக, காவல்துறை கூறியது.

பள்ளி முடிந்த பின்னர், வீட்டுக்குச் செல்லும் போக்குவரத்து வசதியை தவறவிட்டதால், குடும்பத்தினர் திட்டுவார்கள் என்ற அச்சத்தில், அந்த மாணவி பொய்யான புகாரை கொடுத்திருந்ததாக அத்துறை சொன்னது.

-------

சிலாங்கூர் CYBERJAYA-வில் உள்ள விளையாட்டு மைதானத்தில், தன்னை பார்த்தவாறே அருவருக்கத்தக்க செயலில் ஈடுப்பட்டதாகக் கூறி, பெண் ஒருவர் செய்த காவல் புகாரின் பேரில், அந்நிய நாட்டு இளைஞன் கைதாகியுள்ளான் !

--------

நண்பர்களோடு மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, பினாங்கு பாலத்தில் இருந்து ஆடவர் ஒருவர் தவறி விழுந்ததாகக் கூறப்படும் சம்பவம் நிகழ்ந்துள்ளதாக Bomba தெரிவித்துள்ளது !

--------

2026, தொடர்புப் பல்லூடக திருத்த மசோதா, தேசிய பாதுகாப்பு தொடர்பான விதிகள், குறிப்பிட்ட வரம்பிற்குள் மட்டுமே அமல்படுத்தப்படும் என்ற உறுதிமொழியை, தொடர்புத் துறை துணையமைச்சர் வழங்கியதைத் தொடர்ந்து, இன்று மக்களவையில் நிறைவேற்றப்பட்டது !

---------

பேராக் Tanjung Rambutan-னில், 2026 தேசிய தினம், மலேசிய தினக் கொண்டாட்டத்தை முன்னிட்டு நடைபெறும், தேசிய மாதம் மற்றும் Jalur Gemilang கொடியை ஏற்றிப் பறக்கவிடும் பிரச்சாரத்தின் தொடக்க விழா, எளிமையாக நடைபெறவுள்ளது !

என்றாலும், தேசிய மாதம் முழுவதும் மக்கள் தேசியக் கொடியை ஏற்றி நாட்டுப்பற்றை வெளிப்படுத்தும்படி, அரசாங்கம் அழைப்பு விடுத்துள்ளது. 

RAAGA Aaha Siranta Isai!