
Buy Now Pay Later எனப்படும் முதலில் பொருளை வாங்கிவிட்டு பின்னர் பணம் செலுத்தும் திட்டத்தின் கீழ் அதிகமான இளைஞர்கள் இருக்கின்றனர்!
நாட்டில் அம்முறையைப் பயன்படுத்துவோரில் 40 விழுக்காட்டினர் 30 வயதுக்குக் கீழ்ப்பட்டவர்களே என, நிதியமைச்சு தெரிவித்துள்ளது.
மலேசியர்களின் மாதாந்திர கடன் தொகையில் இது சிறிய பங்கு தான் என்றாலும், இளையோரிடையே வேகமெடுத்து வரும் இம்முறையின் பயன்பாடு வருத்தமளிப்பதாக அது கூறியது.
சிலர் தினசரி செலவுக்குக் கூட இந்த கடன் முறையைப் பயன்படுத்துகின்றன.
நாட்டிலுள்ள பெரும்பாலான Buy Now Pay Later சேவை வழங்கும் நிறுவனங்களுக்கு, சிறப்புச் சட்டம் ஏதும் இல்லை.
எனவே இதனை அதிகம் பயன்படுத்துவது, நியாயமற்ற விதிமுறைகள், மறைமுகக் கட்டணங்கள், கடுமையான கடனை திருப்பி வாங்கும் முறை ஆகிய அபாயங்களை உட்படுத்தியிருக்கக்கூடும் என்றும் அவ்வமைச்சு மேலும் சொன்னது.
------
பினாங்கு முழுவதும் உள்ள சிறார் பராமரிப்பு மையங்களில் அதிரடி சோதனை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படும்!
Seberang Jaya மருத்துவமனையில் உள்ள சிறார் பராமரிப்பு மையத்தில் நான்கு மாத குழந்தை ஒன்று உயிரிழந்த சம்பவத்தை அடுத்து, அம்மாநில சமூக மேம்பாட்டு செயற்குழு அவ்வாறு கூறியது.
சோதனை நடவடிக்கைகளை அடிக்கடி மேற்கொள்ளவும் சமூக நலத் துறைக்கு உத்தரவிடப்படும் என என அது மேலும் சொன்னது.
-------
பொதுச் சேவை ஊழியர்களுக்கு வீட்டிலிருந்து வேலை செய்யும் நெகிழ்வான வேலை முறையை அமுல்படுத்தும் சாத்தியக் கூறுகள் குறித்து அரசாங்கம் ஆராய்கிறது!
அது குறித்து இன்று இன்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்து பேசப்படலாம் என, தொடர்புத்துறை அமைச்சர் Fahmi Fadzil தெரிவித்தார்.
------
இதனிடையே மத்தியக் கிழக்கு நாடுகளில் நிலவும் பரபரப்பால் மலேசிய பொருளாதாரத்தில் ஏற்படக்கூடிய குறுகிய, நடுத்தர மற்றும் நீண்ட கால தாக்கங்கள் குறித்து கலந்து பேச, அமைச்சரவை இன்று சிற்ழப்புக் கூட்டம் ஒன்றை நடத்தும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.