
தொலைக்காட்சி மற்றும் வானொலியில் செய்தி வாசிக்கும் கனவுடைய மாணவர்களுக்காக Astro உலகம் ஏற்பாட்டில் தொடங்கியுள்ளது இளம் செய்தி வாசிப்பாளர் தேடல்!
ஐந்து முதன்மை வெற்றியாளர்களுக்குத் தலா ஆயிரம் ரிங்கிட் ரொக்கப் பரிசுடன், Astro செய்திகள் மற்றும் Astro Audio செய்திகளில் செய்தி வாசிக்கும் வாய்ப்பும் கிடைக்கும்.
வெற்றியாளர்களுக்கு Astro செய்திகள் மற்றும் Astro Audio செய்தி வாசிப்பாளர்களை நேரில் சந்திக்கும் வாய்ப்பும் உண்டு.
எட்டு முதல் 12 வயதுக்குட்பட்ட தமிழ்ப்பேசும் மாணவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பங்களை சமர்ப்பிக்கவும் மேல் விவரங்களுக்கும் Astro உலகம் அகப்பக்கத்தை வலம் வரலாம்.
-------
நாட்டிலுள்ள அனைத்து 528 தமிழ்ப்பள்ளிகளையும் ஒரே இடத்தில் இணைக்கும் SJKT Connect எனப்படும், புதிய இலக்கவியல் தரவுத்தளம் ஒன்று அறிமுகம் கண்டுள்ளது!
அத்தளமானது தமிழ்ப்பள்ளி சார்ந்த அனைவரையும் ஒன்றிணைப்பதோடு, தமிழ்ப்பள்ளிகளின் தேவைகள் மேம்பாடுகள் ஆகியவற்றை வெளிப்படையாகப் பதிவு செய்யும் ஒரு வாய்ப்பாக அமைகிறது.
பள்ளிகள், பெற்றோர்கள், முன்னாள் மாணவர்கள், சமூக அமைப்புகள், கல்வியாளர்கள், ஆய்வாளர்கள் என பல்வேறு தரப்பினரை ஒன்றிணைக்கும் தளமாகவும் இந்த SJKT Connect தளம் திகழ்கிறது.
------
நாட்டிலுள்ள இந்திய இளைஞர்களுக்கு சிறந்த வேலை வாய்ப்புகள் அமைய, தேசிய முன்னணியில் உள்ள இந்திய சமூகத்தைப் பிரதிநிதிக்கும் அரசியல் கட்சிகள், TVET தொழிற்பயிற்சி கல்வியில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என, தேசிய முன்னணி தலைவர் Datuk Seri Ahmad Zahid Hamidi வலியுறுத்தியிருக்கிறார்.
இந்திய சமூகத்தைச் சேர்ந்த ஆயிரம் மாணவர்கள் சீனாவில் TVET கல்வியைத் தொடர அரசாங்கம் ஏற்பாடு செய்துள்ளதை, தேசிய TVET மன்ற தலைவருமான அவர் சுட்டிக் காட்டினார்.
------
Whatsapp கணக்குகள் சில ஊடுறுவப்பட்டு, முடக்கப்பட்டுள்ளதாக எழுந்துள்ள புகார்கள் தொடர்பில் மலேசிய தொடர்பு பல்லூடக ஆணையம் இன்று META நிறுவனத்தைச் சந்தித்துப் பேசவிருப்பதாக தொடர்புத்துறை துணை அமைச்சர் தெரிவித்தார்.
இதனிடையே தொலைதொடர்பு நிறுவனங்களுடன் இணைந்து நூற்று ஒரு மில்லியனுக்கும் மேற்பட்ட போலி அழைப்புகளை MCMC முடக்கியுள்ளது.
இது இவ்வாண்டு February தொடங்கி ஆகஸ்டு வரையிலான எண்ணிக்கை மட்டுமே என, துணை அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.
-----
1998ஆம் ஆண்டுக்குப் பிறகு முதல் முறையாக கெடாவில் வெறி நாய்க்கடி Rabies சால் உயிரிழப்பு ஒன்று ஏற்பட்டுள்ளது!
Kubang Pasuவில் கடந்த மாதம் தெறுநாய் ஒன்றால் கடிக்கப்பட்ட 31 வயது இளைஞர் ஒருவர், உடனடி சிகிச்சை எடுத்துக் கொள்ளாததால் உயிரிழந்துள்ளார்.