
இளம் மருத்துவ அதிகாரிகளுக்கான பணிநேரம் தொடர்பாக, விரைவில் புதிய சுற்றறிக்கை வெளியிடப்படவுள்ளதாக, சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது !
சில அதிகாரிகள், வாரத்திற்கு, 85 மணிநேரம் வரை, வேலை செய்ததாக புகார்கள் எழுந்ததை அடுத்து, நெகிழ்வான பணிநேர முறைகள் வலுப்படுத்தப்படுகின்றன.
அந்த மருத்துவ அதிகாரிகள் எதிர்கொள்ளும் அதிக பணிச்சுமையை குறைத்து, நிர்வாகத்தை வலுப்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாக, இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுகிறது.
----------
SPM முடித்து மேற்கல்வியைத் தொடர, உயர்கல்வி கூடங்களுக்கு விண்ணப்பித்த மாணவர்கள், இம்மாதம் 22-ஆம் தேதி தொடங்கி, தங்களுடைய UPU முடிவுகளை சரிபார்த்துக்கொள்ளலாம் !
அன்றைய தினம் நண்பகல் தொடங்கி, மாத இறுதி, மாலை 5 மணி வரை, UPUOnline, MyGov அல்லது UPUPocket வழி, முடிவுகளைப் பெற்றுக்கொள்லலாம்.
---------
மேலும் சில செய்திகள் சுறுக்கமாக ;
பினாங்கில், கடந்த மாத இறுதியில், காவல்துறை பிடியில் இருந்து தப்ப, அபாயகரமான முறையில் வாகனத்தைச் செலுத்தி, மற்ற 12 வாகனங்களை மோதி சேதப்படுத்தியதாகக் கூறப்படும் ஆடவர், நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார் ; அவர் தம்மீதான 14 குற்றச்சாட்டுகளையும் மறுத்தார்.
-----------
பினாங்கில், உலகளாவிய பொருளாதார அசாதாரண நிலை மற்றும் டீசல் விலை உயர்வால், செயல்பாட்டு செலவுகள் அதிகரித்துள்ள போதிலும், உள்ளூர் அதிகாரிகளின் கீழ் உள்ள வணிக வளாகங்களின் வாடகை விகிதங்களை, தற்போதைய நிலையிலேயே வைத்திருக்க, மாநில அரசு முடிவு செய்துள்ளது !
-----------
ஜொகூரில், 2022-ஆம் ஆண்டு முதல், குடும்ப வருமானம் கணிசமாக உயர்ந்துள்ளது ; இதனால், மலேசியாவில் குடும்ப வருமானம் அதிகமாக உள்ள மாநிலங்களில் ஒன்றாக ஜொகூர் விளங்குகிறது !
----------
48-ஆவது உச்சநிலை மாநாடு மற்றும் அது தொடர்பான கூட்டங்களில் கலந்துகொள்ள, பிரதமர் Datuk Seri Anwar Ibrahim பிலிப்பின்ஸ் சென்றடைந்துள்ளார் !