
வீட்டில் இருந்து வேலை செய்யும் சில தரப்பினர், அரச ஊழியர்கள், இணைய பிரச்சனை போன்ற காரணங்களை கூறி, வேலையைச் செய்யாமல் இருக்கலாம் என்ற கவலை தெரிவிப்பது தேவையற்றது !
அரசாங்க தலைமைச் செயலாளர், அவ்வாறு தெரிவித்துள்ளார்.
வீட்டில் இருந்து வேலை செய்ய, தங்களது ஊழியர்களை அனுமதிப்பதற்கு முன், அனைத்து அம்சங்களையும் துறைத் தலைவர்கள் மதிப்பீடு செய்ய வேண்டும் என, அவர் கேட்டுக்கொண்டார்.
சம்பந்தப்பட்ட ஊழியர்களுக்கு, சிறந்த இணைய வசதி உள்ளதா, பணியாற்ற ஏற்ற இடம் உள்ளதா, நிர்ணயிக்கப்பட்ட முக்கிய செயல்திறன் குறியீடுகளை அடைய முடியுமா என்பதை, அவர்கள் உறுதிச் செய்ய வேண்டும், என்றாரவர்.
வீட்டிலிருந்து பணியாற்றும் ஊழியர்களை, நிர்ணயிக்கப்பட்ட KPI அடிப்படையில், துறைத் தலைவர்கள் கண்காணிப்பர் என்பதை அவர் மேற்கோள்காட்டினார்.
----------
மோட்டார் சைக்கிள் ஒன்று கூடும் நிகழ்ச்சிகளுக்கு எதிரான அமலாக்க நடவடிக்கைகளை, சாலைப் போக்குவரத்து துறை, மேலும் தீவிரப்படுத்தவுள்ளது !
இத்தகைய நிகழ்ச்சிகளுடன் தொடர்புடைய விபத்துகள் அதிகரித்து வருவதால், அது அவசியமாவதாக அத்துறை கூறியது.
அண்மையில், Terengganu Kuala Nerus-சில் நிகழ்ந்த மோட்டார்சைக்கிள் நிகழ்ச்சி காலகட்டத்தில், சிலர் விபத்துக்குள்ளானதை சுட்டிக்காட்டி, அது அவ்வாறு சொன்னது.
----------
Negeri Sembilan ஆட்சிக்குழு உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் திட்டம் ஏதும், மாநில அரசாங்கத்துக்கு இல்லை !
அண்மைய சட்டமன்ற தேர்தலுக்குப் பிறகு, அம்மாநிலத்தின் புதிய மந்திரி பெசாராகப் பதவியேற்றுக் கொண்ட பிறகு, Datuk Ismail Lasim, அவ்வாறு தெரிவித்துள்ளார்.
தற்போது ஒதுக்கப்பட்டுள்ள 10 மாநில ஆட்சிக்குழு உறுப்பினர்களே போதுமானவை என்றும், இதுவரை மாநில நிர்வாகத்தில், நடைமுறையில் இருக்கும் இந்த அமைப்பே தொடரும் என்றும் அவர் கூறினார்.
---------
நெகிரி செம்பிலானில் உள்ள தனியார் துறை நிறுவனங்கள், இன்று அறிவிக்கப்பட்டுள்ள சிறப்பு விடுமுறையை, தங்களது ஊழியர்களுக்கு வழங்குவதா இல்லையா என்பதைத் தீர்மானிக்கலாம் !
ஏனெனில் இது விருப்பத்தின் அடிப்படையிலான சிறப்பு விடுமுறையாகும் என, மலேசிய தீபகற்ப தொழிலாளர் துறை தெரிவித்துள்ளது.
---------
பேராக் Pangkor தீவு கடற்பகுதியில் மிதந்து கொண்டிருந்த அடையாளம் தெரியாத ஆடவர் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது !