பொதுமக்கள் இணையவழிச் சேவைகளை முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள் !
அது, கவுண்டர்களுக்கு நேரில் செல்வதைத் தவிர்த்து, எளிதான முறையில் தங்களின் வேலைகளை முடித்துக் கொள்ள வகைச் செய்யும் என சாலை போக்குவரத்து துறை JPJ தெரிவித்துள்ளது.
மொத்தம் 49 சேவைகள் டிஜிட்டல் முறையில் கிடைக்கப் பெறுகின்றன.
அதிகாரப்பூர்வ இணையதளமான www.jpj.gov.my மூலம் 33 வகையான பரிவர்த்தனைகளை மேற்கொள்ளலாம்.
MyJPJ செயலி மூலம் மேலும் 16 வகையான பரிவர்த்தனைகளை அணுகலாம் என JPJ நினைவூட்டியுள்ளது.
மத்திய கிழக்கில் நிலவும் மோதல்களால் எரிபொருள் விலை உயர்ந்துள்ள நிலையில், குறிப்பாகப் பணத்தைச் சிக்கனப்படுத்தவும் அது உதவும் என அத்துறை கூறியது.
--
சிலாங்கூர், செப்பாங்கில் கடந்த வெள்ளிக்கிழமை பெண்ணைக் கத்தியால் குத்தியதாக சந்தேகிக்கப்படும் தனியார் பல்கலைக்கழக மாணவர் ஒருவர் ஏழு நாட்களுக்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
22 வயதான சந்தேக நபர் சம்பவம் நடந்த அன்றே கைது செய்யப்பட்டார்.
அச்சம்பவம் குறித்து இதுவரை காவல்துறை 10 பேரிடம் வாக்குமூலம் பதிவு செய்துள்ளது.
34 வயதான பாதிக்கப்பட்ட பெண் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.
--
கிளாந்தான், Golok ஆற்றின் வழி சட்டவிரோதப் பாதையைப் பயன்படுத்தித் தாய்லாந்திலிருந்து மலேசியாவிற்குள் நுழைய முயன்ற 34 பள்ளி மாணவர்களைப் பொது நடவடிக்கைப்படையினர் தடுத்து நிறுத்தியுள்ளனர்.
தடுத்து நிறுத்தப்பட்டவர்களில் 22 மாணவர்களும், 12 மாணவிகளும் அடங்குவர்.
7 முதல் 16 வயதிற்குட்பட்ட அவர்கள் அனைவரும் மலேசியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
--
கிளந்தான் Kota Bahru-வில், நேற்று வாகன ஓட்டுநர் ஒருவர் தவறுதலாக accelerator-ஐ அழுத்தியதில், கார் கட்டுப்பாட்டை இழந்து மோதி படிவம் ஒன்று மாணவி ஒருவர் உயிழந்துள்ளார்.
மற்றொரு மாணவி கடுமையாக காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
--
இதனிடையே, கல்வி அமைச்சு அச்சம்பவம் குறித்து உள் கட்ட விசாரணையைத் தொடக்கியுள்ளது.
விசாரணையில், அனைத்து நிலையான செயல்பாட்டு நடைமுறைகளும் பின்பற்றப்படுகின்றனவா என்பதை ஆய்வு செய்வதே அதன் நோக்கம் என அமைச்சர் Fadhlina sஸ்idek கூறினார்.
--
இவ்வேளையில், அச்சம்பவத்தில் உயிரிழந்த 13 வயது மாணவி Nur Fatimatul Hawa-வின் குடும்பத்தினருக்கு, பிரதமர் தனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்.
--