Skip to main content
இன்று வழக்கம்போல் செயல்படும் பள்ளிகள் !

 

Melaka, Selangor, Negeri Sembilan மற்றும் Pahang மாநிலத்தின் Kuantan, Rompin, Bentong ஆகிய பகுதிகளில், இன்று அனைத்து பள்ளிகளும் வழக்கம்போல் செயல்படுகின்றன !

ஆயினும், புகைமூட்டம் காரணமாக, அனைத்து வெளிப்புற நடவடிக்கைகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

இதனிடையே, பள்ளிக்கு வரும் மாணவர்கள் சுவாசக்கவசம் அணியும்படி ஊக்குவிக்கப்படுகின்றனர்.

பிள்ளைகளின் உடல்நலம் குறித்து கவலைப்படும் பெற்றோர், பள்ளிக்குத் தகவல் தெரிவித்துவிட்டு, அவர்களைப் பள்ளிக்கு அனுப்பாமல் இருக்கலாம் என, Melaka மாநிலக் கல்வித் துறை தெரிவித்துள்ளது.

----------

இதனிடையே, புகைமூட்டம் தொடர்ந்து கவலைக்குரிய நிலையில் இருப்பதால், பள்ளிகளை மூடுவது தொடர்பான உத்தரவுகள் உட்பட, தேசிய புகைமூட்டச் செயல்திட்டத்தை மேம்படுத்துவது குறித்து அரசாங்கம் ஆராய்ந்து வருகிறது !

பள்ளிகள் சில நாட்களுக்கு மூடப்பட வேண்டிய சூழல் ஏற்பட்டால், மாணவர்களின் கற்றல் நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெறுவதை உறுதிசெய்ய, கல்வி அமைச்சு முன்கூட்டியே தயாராக இருக்க வேண்டும் என, பிரதமர் Datuk Seri Anwar Ibrahim தெரிவித்துள்ளார்.

--------

இவ்வேளையில், நாட்டில் 29 பகுதிகளில், காற்றின் தரம் பாதிக்கப்பட்டுள்ளது !

சிலாங்கூர், நெகிரி செம்பிலான், ஜொகூர் உள்ளிட்ட மாநிலங்களின் சில பகுதிகளில், காற்றின்  தரத்தைக் குறிக்கும் API குறியீடு, 100-ரைக் கடந்து, ஆரோக்கியமற்ற அளவில் உள்ளது.

----------

Roblox போன்ற, இணைய விளையாட்டுத் தளங்களிலும், டிஜிட்டல் அடையாளம் மற்றும் வயதைச் சரிபார்க்கும் முறைகளை விரிவுபடுத்துவது குறித்து அரசாங்கம் ஆராயும் !

சிறுவர்களின் பாதுகாப்பையும், அத்தளங்கள் சிலரால் தவறாகப் பயன்படுத்தப்படுவதையும் கருத்திற்கொண்டு, அந்நடவடிக்கை ஆராயப்படும் என, தொடர்புத்துறை அமைச்சு தெரிவித்தது.

--------

பினாங்கு Tasek Gelugor-ரில், தனது பராமரிப்பில் இருந்த, பத்து மாதமேயான ஆண் குழந்தை உயிரிழந்ததை அடுத்து, குழந்தை பராமரிப்பாளர் கைது செய்யப்பட்டுள்ளார் !

---------

France-சில் ஏற்பட்டுள்ள கலவரத்தைத் தொடர்ந்து, அங்கு கல்வி பயின்று வரும், MARA கல்வி உதவித்தொகை பெறும் 242 மாணவர்கள், பாதுகாப்பாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது !

RAAGA Aaha Siranta Isai!