Skip to main content
இந்தியாவில் வரலாறில் இல்லாத தொங்கு சட்டமன்றம்!

 

தமிழகத்தில் திராவிட கட்சிகளின் 59 ஆண்டுகால ஆதிக்கத்திற்கு முற்றுப் புள்ளி வைக்கும் விதமாக அமைந்துள்ளது இம்முறை சட்டமன்ற தேர்தல்! 

 

திடீர் திருப்பமாக நடிகர் விஜயின் தவெக கட்சி, போட்டியிட்ட முதல் தேர்தலிலேயே வெற்றிப் பெற்று தனிப்பெரும் கட்சி என்ற அங்கீகாரத்தையும் பெற்றுள்ளது. 

 

108 தொகுதிகளில் தவெக வெற்றிப் பெற்றாலும், ஆட்சி அமைப்பதற்கான தனிப்பெரும்பான்மை அதனிடம் இல்லை. 

 

மொத்தம் 234 தொகுதிகளில் 118 தொகுதிகளில் வெற்றிப் பெற்றால் தான் ஒரு கட்சி ஆட்சியமைக்க முடியும். 

 

இம்முறை சட்டமன்ற தேர்தலில் ஒட்டுமொத்தமாக தவெக 34.95 விழுக்காட்டு வாக்குகளையும், திமுக மற்றும் கூட்டணி 31.38 விழுக்காட்டு வாக்குகளையும், அதிமுக மற்றும் கூட்டணி கட்சிகள் 27.4 விழுக்காட்டு வாக்குகளையும் பெற்றுள்ளன. 

 

இந்நிலையில் ஆட்சி யார் கையில் அமையக்கூடும், தமிழக அரசியலில் அடுத்தது என்ன நிகழும் என்ற எதிர்ப்பார்ப்பு கூடிக் கொண்டே போகிறது. 

 

-----  

 

நாட்டின் மருந்து கையிருப்பில் ஏற்படும் சிக்கல்களைக் களைய சிறப்பு பணிக்குழு ஒன்றை அமைத்துள்ளது சுகாதார அமைச்சு! 

 

மேற்கு ஆசிய மோதலால் உலகின் பொருளாதார நிலை பாதிக்கப்பட்டு, அதனால் ஏற்பட்டுள்ள தாக்கங்களுக்கு நடுவே அந்த பணிக்குழு உருவாக்கப்பட்டுள்ளது. 

 

அக்குழு அண்மைய தரவுகளை அணுக்கமாகக் கண்காணித்து, மாற்று மருந்து விநியோக வழிமுறைகளை ஆராய்ந்து வருகிறது. 

 

முக்கியமான மருந்துகளின் கையிருப்பு 60 நாட்களுக்குத் தேவையான அளவில் இருப்பதாக KKM தெரிவித்தது. 

 

-----  

 

மலாக்கா, Alor Gajahவின் வடக்கு தெற்கு விரைவுச் சாலையில் தடம்புரண்ட பயணிகள் வேனை ஓட்டிச் சென்ற நபர் போதை மருந்து உட்கொண்டிருந்ததைக் காவல் துறை உறுதிப்படுத்தியிருக்கிறது. 

 

எட்டு இந்திய சுற்றுப் பயணிகள் விபத்தின் போது அந்த வேனில் இருந்த நிலையில், அவர்களில் மூவர் சிறு காயங்களுக்கு ஆளாகினர். 

 

------ 

 
ஜப்பானில் இருக்கும் மலேசியாவைச் சேர்ந்த மூன்று யானைகளை மீண்டும் நாட்டிற்குக் கொண்டு வருவதுஹ் பற்றி பேச, பஹாங் MB தைப்பிங் மிருகக்காட்சிசாலையைச் சந்திக்கவிருக்கின்றார்! 

 

நான்கு வெவ்வேறு பருவங்களில் அவற்றின் பாதுகாப்பு மற்றும் நலன் என்னவாகும் என்ற கவலைகள் எழுந்து வந்த நிலையில், அவற்றை பாதுகாப்பாக மீண்டும் மலேசியா அழைத்து வரும் திட்டங்கள் குறித்து அக்கூட்டத்தில் பேசப்படவிருக்கின்றது. 

 

------  

 
பினாங்கில் 30 கிலோமீட்டர் ஓட்டப் போட்டி ஒன்றை ஏற்பாடு செய்திருந்த குழு, வெப்ப காலத்திற்கான எல்லா தர செயல்பாட்டு நடைமுறைகளையும் பின்பற்றியிருப்பது தெரிய வந்துள்ளது! 

 

தண்ணீர் விநியோக முகப்புகள், அவசர தேவைக்கு உதவ மருத்துவ குழு என எல்லா ஏற்பாடுகளையும் அவர்கள் செய்து வைத்திருந்ததாக காவல் துறை தெரிவித்தது. 

 

அப்போட்டியில் கலந்து கொண்டதை அடுத்து, நபர் ஒருவர் வெப்ப வாதத்தால் உயிரிழந்தார். 

 

RAAGA Aaha Siranta Isai!