Skip to main content
இந்தியாவிற்குச் செல்லும் மலேசியர்களுக்கு, புதிய விதி !

இந்தியாவிற்குச் செல்லும் மலேசியர்களுக்கு, புதிய விதி ஒன்றை வெளியிட்டுள்ளது, புது டில்லியில் இருக்கும் மலேசிய தூதரக உயர் ஆணையம் ! 

பயணிகள் இங்கிருந்து புறப்படுவதற்கு குறைந்தது 72 மணி நேரத்திற்கு முன்னதாகவே இணையத்தில் வருகை அட்டை அல்லது மின்-வருகை அட்டைக்கு விண்ணப்பித்து இருக்க வேண்டும். 
 
OCI கார்டு எனப்படும் வெளிநாட்டு இந்தியக் குடிமக்கள் அட்டை வைத்திருப்பவர்களுக்கும், அது பொருந்தும் என அவ்வாணையம் கூறியது. 

-- 

 மலாக்கா, டுரியான் துங்காலில் கடந்த நவம்பர் மாதம் மூவர் சுட்டு கொல்லப்பட்டச் சம்பவம் தொடர்பில், ஆய்வுச் செய்து வருகிறது, சட்டத்துறை அலுவலகம் ! 

அச்சம்பவம் குறித்து அரச மலேசிய காவல் படை வழங்கிய விசாரணை ஆவணங்களை, AGC முழுமையாக பரிசீலித்து வருகிறது.  

-- மலாக்காவில், காவல் துறையின் பெயரைப் பயன்படுத்தி Whatsapp செயலி வழியாக பொதுமக்களிடமிருந்து நன்கொடை கோரிய சந்தேக நபர்களை, மாநில போலிஸ் தேடி வருகிறது. 

-- 

மலாக்காவில், மூன்று வயது சிறுமி போதைப்பொருள் உட்கொண்டிருந்தச் சம்பவம் தொடர்பில், 39 வயதிலான சமூக ஊடகப் பிரபலம் ஒருவர் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார். 

-- 

ஆகக் கடைசி தகவல் படி, பெர்லிஸ், கெடா, கிளந்தான் மாநிலங்களின் சி பகுதிகளில் முதல் கட்ட வெப்ப எச்சரிக்கை விடுத்துள்ளது, மலேசிய வானிலை ஆய்வு துறை. 

-- 

இந்தியா, தமிழ் நாட்டில், இன்று ஒரே கட்டமாக தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. 

234 தொகுதிகளிலும், காலை மணி 7 தொடங்கி மாலை மணி 6 வரை வாக்குப்பதிவு நடைபெறும்.  

தேர்தல் முடிவுகள் மே நான்காம் தேதி வெளிவரும். 

இம்முறை, ஆளும் திமுக தலைமையிலான கூட்டணி, எதிர்கட்சியான ஆதிமுக BJP கூட்டணி, நாம் தமிழர் கட்சி, நடிகரும் அரசியல்வாதியுமான விஜயின் தவெகா உள்ளிட்ட கட்சிகளுக்கிடையே தீவிரமான நான் நான்கு முனை போட்டி நிலவுகிறது. 

RAAGA Aaha Siranta Isai!