Skip to main content
இந்தோனேசிய தீ ; மலேசிய நிறுவனங்கள் ஈடுபாடா ?

 

இந்தோனேசியாவில் திறந்தவெளியில் தீ மூட்டும் நடவடிக்கைகளில், மலேசிய நிறுவனங்கள் ஈடுபட்டதாக இதுவரை எந்தவோர் அதிகாரப்பூர்வப் புகாரும் கிடைக்கவில்லை !

அதன் தொடர்பில், வெளியுறவு அமைச்சு மற்றும் தோட்டத் தொழில், மூலப்பொருள் அமைச்சு ஆகியவற்றுடன் சரிபார்க்கப்பட்டதாக, இயற்கை வளங்கள், சுற்றுச்சூழல் நிலைத்தன்மை அமைச்சு தெரிவித்துள்ளது.

மலேசிய நிறுவனங்கள் இதில் ஈடுபட்டிருப்பது உறுதியானால், உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சு கூறியது.

---------

இதனிடையே, ஆகக் கடைசி நிலவரப்படி, நாட்டில் 27 இடங்களில் காற்றின் தரம் பாதிக்கப்பட்டுள்ளது !

ஜொகூர், மலாக்கா, பஹாங் உள்ளிட்ட மாநிலங்களின் பெரும்பாலான இடங்களும் அவற்றில் அடங்கும்.

அப்பகுதிகளில், காற்றின் தரத்தைக் குறிக்கும் API குறியீடு, 100-ரைக் கடந்து, ஆரோக்கியமற்ற அளவில் பதிவாகியுள்ளது.

---------

ஜப்பானில் போதைப்பொருள் கடத்த முயன்றதாக கூறப்படும் மலேசியர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் குறித்து, துல்லியமான தகவல்களைப் பெற, அந்நாட்டு அதிகாரிகளுடன் உள்துறை அமைச்சு தொடர்புகொள்கிறது !

அவ்விவகாரத்தின் உண்மை நிலையை உடனடியாகக் கண்டறிய, புக்கிட் அமானின் போதைப்பொருள் குற்றப் புலனாய்வுத் துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக, அமைச்சு கூறியது.

சனிக்கிழமை, Haneda விமான நிலையத்தில், காலணிகளுக்குள், கொக்கைன் போதைப்பொருளை மறைத்து, கடத்த முயன்ற சந்தேகத்தின் பேரில், 5 மலேசியர்கள் கைதாகினர்.

---------

அடுத்தாண்டு, மிகக் கடுமையான எல் நினோ பருவம் ஏற்படுவதற்கான சாத்தியம் உள்ளதால், அதனை எதிர்கொள்வதற்கான முன்னேற்பாடுகளை, இப்போதே தொடங்க வேண்டும் !

கடும் வெப்பம், தண்ணீர் தட்டுப்பாடு மற்றும் உணவுப் பொருட்களின் விலை உயர்வு ஏற்படும் வரை காத்திருக்கக் கூடாது என, மலேசிய பயனீட்டாளர் சங்கங்களின் சம்மேளனம் வலியுறுத்தியுள்ளது.

----------

செப்டம்பர் 17-ஆம் தேதி முதல், அக்டோபர் 11-ஆம் தேதி வரை, நாடு முழுவதும், 2 லட்சத்து ஈராயிரத்துக்கும் மேற்பட்ட, புதிய MyKad அட்டைகள் வெளியிடப்பட்டுள்ளதாக, JPN தெரிவித்துள்ளது !

RAAGA Aaha Siranta Isai!