
இந்தோனேசியாவில் விமானச் சேவை தடையால் பாதிக்கப்பட்ட மலேசியர்களுக்கு உதவ அங்குள்ள மலேசிய தூதரகம் தயார்!
ஜக்கார்த்தாவுடன் அதன் தொடர்பில் இணைந்து பணியாற்றி வருவதாக வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்தோனேசியாவில் எரிமலை வெடித்ததில் விமான சேவைகள் ரத்துச் செய்யப்படுவதும் மறு அட்டவணையிடப்படுவதுமாக இருந்தன.
ஆயிரத்து ஐநூரு மலேசியார்கள் அதில் பாதிக்கப்பட்டனர்.
-----
இணைய மோசடிக்காரர்களுக்கான பழைய தண்டனைகளுக்கு சில புதுப்பிக்கப்பட்ட பரிந்துரைகளை முன்வைத்துள்ளது காவல் துறை!
பொது பாதுகாப்பை உறுதிச் செய்ய, குற்றவாளிகளுக்கு பிரம்படி தண்டனை கொடுக்கப்பட வேண்டும் என, தேசிய காவல் படை தலைவர் Tan Sri Mohd Khalid Ismail கூறியுள்ளார்.
தினசரி நாட்டில் 500 முதல் 600 மோசடி அழைப்புகளை தேசிய மோசடி நடவடிக்கை மையம் பெறுகிறது என்றும், மோசடி தொடர்பான கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றார் அவர்.
------
நேப்பாள பெருவெள்ளம் மற்றும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்டோரை அடையாளம் காண உதவ, மரபனு வல்லுனர்களை அனுப்ப மலேசியா தயாராக இருக்கிறது!
அந்நாட்டு அரசின் அனுமதிக்காகக் காத்திருப்பதாக வெளியுறவு அமைச்சு கூறியது.
------
ECRL என்றழைக்கப்படும் கிழக்குக் கரை ரயில் திட்டத்திற்கான பயணிகள் டிக்கட் விலை இன்னும் இறுதிச் செய்யப்படவில்லை!
அண்மையில் அதன் விலை குறித்து சமூக ஊடகங்களில் வெளிவந்த தகவல் பொய்யானது என்றும், இவ்வாண்டு இறுதி வாக்கில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் என்றும், Malaysia Rail Link நிறுவனம் கூறியிருக்கிறது.
------
கிளாந்தான் Gunung Gerahவில் காணாமல் போனதாகக் கூறப்படும் ஆறு மலையேறிகளைப் பாதுகாப்பாக மீட்டுள்ளது தீயணைப்பு மீட்புத் துறை!
அவர்கள் அனைவரும் மருத்து பரிசோதனை மற்றும் சிகிச்சைக்காக சுகாதார கிளினிக்குக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.