Skip to main content
இரத்தத்தில் உள்ள மதுவின் அளவு, 0.05 !

 

வாகனம் ஓட்டும்போது அனுமதிக்கப்படும் ரத்தத்தில் உள்ள மதுவின் அளவு, 0.05 விழுக்காடு வரம்பை, மலேசியா தொடர்ந்து நடைமுறையில் வைத்திருக்கும் !

தற்போதுள்ள அந்த அளவு, சுகாதார அமைச்சு நிர்ணயித்துள்ள மருத்துவக் குறியீடுகளுக்கு ஏற்பவே உள்ளதாக, புக்கிட் அமான் தெரிவித்துள்ளது.

அதே வேளை, மது மற்றும் போதைப்பொருள் அருந்திவிட்டு வாகனம் ஓட்டுபவர்களுக்கு எதிரான தண்டனைகளை மேலும் கடுமையாக்குவது குறித்து, காவல்துறை ஆய்வு செய்து வருவதாகவும் அது சொன்னது.

----------

ஜொகூர் MERSING-கில், 31 வயது ஆடவர் ஒருவர் ஓட்டிச் சென்ற கார், யானைக் குட்டி மீது மோதியதில், சுமார் ஐந்து மீட்டர் ஆழமுள்ள பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது !

அவ்விபத்தில், யானைக் குட்டி உயிரிழந்தது ; அதன் தாய் என நம்பப்படும் பெரிய யானை, சம்பவ இடத்திலேயே நீண்ட நேரம் நின்றதால், அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

காரோட்டுநரும் காயமடைந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

--------

பேராக் Hutan Melintang-கில், தனது வீட்டின் அருகே சடலமாக மீட்கப்பட்ட,  autism எனப்படும், மதியிறுக்கக் குறைபாடு உள்ள ஆறு வயது சிறுவன், நீரில் மூழ்கி உயுரிழந்தது பிரேதப் பரிசோதனையில் உறுதியாகியுள்ளது !

------

கோலாலம்பூர், பினாங்கு, கெடா உட்பட, சில மாநிலங்களின் பெரும்பாலான பகுதிகளில், இன்றிரவு 9 மணி வரை, இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என, மலேசிய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது !

---------

நாடு முழுவதும் நேற்று மட்டும், 1,800-க்கும் மேற்பட்ட சாலை விபத்துகள் பதிவுச் செய்யப்பட்டன ; அதில் 16 மரணங்கள் பதிவாகின !

--------

பினாங்கு BUTTERWORTH-டில், காற்பந்தாட்டங்களுக்கு சட்டவிரோதமாக பந்தயம் கட்டிய ஐவருக்கு, மூவாயிரம் ரிங்கிட் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது !

RAAGA Aaha Siranta Isai!