
ஜொகூரிலும், Negeri Sembilan-னிலும், வெவ்வேறு தேதிகளில், சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது !
ஜொகூரில் இம்மாதம் 27-ஆம் தேதி, வேட்பு மனுத் தாக்கல் நடைபெறுகிறது.
ஜூலை 7-ஆம் தேதி, முன்கூட்டிய வாக்களிப்பு நடைபெறுகின்ற வேளை, ஜூலை 11-ஆம் தேதி, அங்குள்ள மக்கள் வாக்களிப்பர்.
அதே வேளை, Negeri Sembilan-னில், ஜூலை 18-ஆம் தேதி வேட்பு மனுத் தாக்கல் நடைபெறுகின்ற நிலையில், ஜூலை 28-ஆம் தேதி, முன்கூட்டிய வாக்களிப்பு நடைபெறுகின்றது.
பின்னர் ஆகஸ்ட் 1-ஆம் தேதி, அங்கு மக்கள் வாக்களிப்பர்.
-----------
இதனிடையே, அந்த இரு மாநிலங்களுக்கான தேர்தல், ஒரே நேரத்தில் நடத்த முடியாததற்கு, தளவாட மற்றும் செயல்பாட்டு தயார்நிலை நடவடிக்கைகளே முக்கிய காரணமாகும் என, தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது !
நெகிரி செம்பிலான் சட்டமன்றம், அதன் காலக்கெடு முடிவதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே திடீரென கலைக்கப்பட்டதால், தேர்தல் ஏற்பாடுகளுக்கு கூடுதல் நேரம் தேவைப்படுகிறது என, அவ்வாணையும் கூறியது.
----------
இந்தோனேசியா ஜகார்த்தாவில் உள்ள மலேசியர்கள், இன்று நடைபெறவுள்ள போராட்டங்கள் காரணமாக, ஜகார்த்தா மத்திய பகுதியில் உள்ள மக்கள் கூடும் இடங்களை தவிர்க்கும்படி, அறிவுறுத்தப்பட்டுள்ளனர் !
அங்குள்ள மலேசிய தூதரகம், நிலவரங்களை நெருக்கமாக கண்காணித்து வருகின்றது.
----------
கோலாலம்பூரில் உள்ள 122 இடைநிலைப் பள்ளிகளில், காவல்துறையினரின் பங்கேற்பு இருமடங்காக அதிகரிக்கப்படவுள்ளது !
சாலைப் பாதுகாப்பு மற்றும் சட்டவிரோத தெருப் பந்தயங்களின் ஆபத்துகள் குறித்து, மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் புதிய திட்டத்தின் கீழ், அம்முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.
---------
ஜொகூர் Skudai-யில், வாகனத்தில் சத்தம் போட்டுக்கொண்டிருந்ததை கண்டித்த e-hailing ஓட்டுநரைத் தாக்கியதாகக் கூறப்படும் மூன்று வெளிநாட்டினரை, காவல்துறையினர் தேடி வருகின்றனர் !