Skip to main content
ஜொகூர் தேர்தல் ; வேட்புமனுத் தாக்கல் நாள் மழை !

 

ஜொகூர் சட்டமன்ற தேர்தலின்வேட்புமனுத் தாக்கல் நாளான சனிக்கிழமையன்று நிலவும், வானிலை குறித்த தகவலை, மலேசிய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது !

கூலாய், ஜொகூர் பாரு, கோதா திங்கி உட்பட சில பகுதிகளில், மாலையில் இடியுடன் கூடிய கனம்ழை பெய்ய வாய்ப்புள்ளது.

காலையிலும் மழை தூறலாம் என கணிக்கப்பட்டிருக்கிறது.

ஆனால், குளுவாங், மெர்சிங், மற்றும் சிகாமாட்டில் காலையில் வானம் நன்றாக இருக்கக்கூடும்.

--------

BUDI95 திட்டத்தின் கீழ் டீசல் பயனர்களுக்கு வழங்கப்படும், மாதாந்திர 300 லிட்டர் ஒதுக்கீடு, போதுமானது என நிதியமைச்சு தெரிவித்துள்ளது !

புள்ளிவிவரத் துறையின் தரவுகளின்படி, டீசல் பயன்படுத்துவோரில் 95 விழுக்காட்டினர், மாதத்திற்கு 300 லிட்டருக்கும் குறைவாகவே பயன்படுத்துவதாக அமைச்சு கூறியது.

அதே சமயம், மாதத்திற்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள 200 லிட்டர் RON95 ஒதுக்கீட்டை விட அதிகமாக பயன்படுத்துபவர்கள், தொடர்ந்து ஒரு விழுக்காட்டிற்கும் குறைவாகவே இருப்பதாக, தரவுகள் தெரிவிக்கின்றன.

----------

மேலும் சில செய்திகள் சுறுக்கமாக ;

வேலை இழப்புகள் அண்மையில் அதிகரித்திருந்தாலும், மலேசியா இன்னும் முழு வேலைவாய்ப்பு பொருளாதாரமாகவே கருதப்படுகின்றது !

ஏப்ரலில், வேலை இழப்பு விகிதம் சற்றே உயர்ந்து 3 விழுக்காடாக இருந்தாலும், அது 4 விழுக்காடு எனக் கருதப்படும் முழு வேலைவாய்ப்பு நிலையைத் தாண்டாமல்  இருப்பதாக, பொருளாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

---------

மலேசியா, உலகின் பாதுகாப்பான 163 நாடுகளின் பட்டியலில் தனது நிலையை மேலும் வலுப்படுத்தி, 12-ஆவது இடத்தைப் பிடித்துள்ளது !

--------

Venezuela-வில் அடுத்தடுத்து 7.5 மற்றும் 7.2 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கங்களால், குறைந்தது 32 பேர் பலியான வேளை, நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளதாக, செய்திகள் வெளிவந்துள்ளன !

---------

மற்றொரு பக்கம், வடகிழக்கு ஜப்பானில், 7.2 ரிக்டர் அளவில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டதில், நால்வர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது !

RAAGA Aaha Siranta Isai!