Skip to main content
ஜொகூர் தேர்தலை ஒட்டி கூடுதல் ETS ரயில் சேவைகள்!

 

 

இவ்வாரம் வெள்ளிக்கிழமை தொடங்கி ஞாயிற்றுக்கிழமை வரை நாளுக்கு எட்டு கூடுதல் ETS ரயில் சேவைகளை ஏற்பாடு செய்கிறது KTMB! 

 

சனிக்கிழமை நடைபெறும் ஜொகூர் மாநிலத்தின் 16ஆவது சட்டமன்ற தேர்தலுக்காக தெற்கு நோக்கிச் செல்வோரின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என எதிர்ப்பார்க்கப்படுவதால் நெரிசலைக் குறைக்க அந்த கூடுதல் சேவை ஏற்பாடு செய்யப்படுகிறது. 

 

அந்த மூன்று நாட்களுக்கு அவற்றுக்கான டிக்கட் விலையில் 20 விழுக்காடு கழிவும் வழங்கப்படுவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. 

 

------ 

 

இதனிடையே ஜொகூர் தேர்தலுக்கான முன்கூட்டியே வாக்களிப்பில் 94.49 விழுக்காட்டினர் வாக்களித்திருக்கின்றனர்! 

 

19 ஆயிரத்து நானூருக்கும் மேற்பட்ட, காவல் மற்றும் ராணுவ வீரர்களும் அவர்களது துணைகளும் நேற்று வாக்களித்தனர். 

 

----- 

 

நவம்பர் தொடங்கி ஜனவரி வரை சூப்பர் El Nino பருவம் நீடிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது! 

 

இதையடுத்து ஆண்டிறுதியில், வெப்பம் அதிகரித்து மழையின் எண்ணிக்கை குறையலாம் என, MetMalaysia தெரிவித்திருக்கின்றது. 

 

------  

 

இதனிடையே சூப்பர் El Nino பருவத்தை எதிர்கொள்ள மலேசியா தயார் என தேசிய பேரிடர் நிர்வாக அமைப்பு நட்மா உத்தரவாதம் அளித்துள்ளது! 

 

சம்பந்தப்பட்ட அரசு நிறுவனங்கல் அனைத்தும் முழுமையாக ஆயத்த நிலையில் இருப்பதை உறுதிச் செய்ய, அவ்வப்போது கூட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அது கூறியது. 

 

------ 

  

மற்றொரு நிலவரத்தில், சிலாங்கூரில் வெப்ப காலத்தை சமாளிக்க போதுமான நீர் கையிருப்பு இருப்பதை உறுதிச் செய்ய, மாநில அரசு தக்க நடவடிக்கைகளை எடுத்து வருகிறது! 

 

இப்போதைக்கு அம்மாநிலத்தின் ஏழு அணைக்கட்டுகளிலும் நீரின் அளவு 75 விழுக்காட்டை எட்டியிருக்கின்றது. 

 

 

 

RAAGA Aaha Siranta Isai!