Skip to main content
ஜொகூர் வெள்ளம் ; கூடுதல் நிதி ஒதுக்கீடு !

 

ஜொகூர் பாரு நகரைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஏற்படும் திடீர் வெள்ளப் பிரச்சினைக்குத் தீர்வு காண, மாநில அரசு கூடுதலாக 3 கோடி ரிங்கிட் ஒதுக்கவுள்ளது !

குறுகிய மற்றும் நடுத்தர கால வெள்ளத் தடுப்பு நடவடிக்கைகளை விரைவுபடுத்தும் வகையில், அந்த கூடுதல் நிதி பயன்படுத்தப்படும்.

நேற்று வழக்கத்திற்கு மாறாக பெய்த கனமழையால், அந்நகரின் பல பகுதிகளில், திடீர் வெள்ளம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, அந்த கூடுதல் நிதி ஒதுக்கப்படுகிறது.

வடிகால் அமைப்புகளை மேம்படுத்துவது, நீர்த்தேக்கக் குளங்களை ஆழப்படுத்துவது மற்றும் நீர் இறைக்கும் இயந்திரங்களின் திறனை அதிகரிப்பது உள்ளிட்ட உடனடி நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தவும் ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது.

---------

Datuk Seri M. Saravanan-னின் 12 வயது மகனிடம் சொத்து விவரங்களை அறிவிப்பதற்கான அறிவிக்கை வழங்கியதாகக் கூறப்படுவதை, மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் மறுத்துள்ளது !

சட்டத்தில், இத்தகைய அறிவிக்கைகளைப் பெறுபவர்களுக்கு குறிப்பிட்ட வயது வரம்பு எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை என்றாலும், விவகாரத்தில், நியாயமான அடிப்படையில் தமது அதிகார வரம்பிற்குட்பட்ட விவேகமான முடிவை மேற்கொண்டதாக, அவ்வாணையம் கூறியது.

Saravanan, அவரது மனைவி மற்றும் பிள்ளைகளுக்கு ஏற்கெனவே அறிவிக்கை வழங்கப்பட்டதாகவும், வெளிநாட்டில் படிக்கும் சில பிள்ளைகள் நேரில் வர முடியவில்லை.

அதே வேளை, 12 வயது மகன் MACC தலைமையகத்துக்கு வந்தது, அறிவிக்கை பெறுவதற்காக அல்ல; பெற்றோருடன் வந்திருந்ததாக அவ்வாணையம் விளக்கமளித்தது.

----------

பினாங்கு BUKIT MERTAJAM-மில் , பள்ளிக்கு முன் சாலையைக் கடந்து கொண்டிருந்த 2 மாணவர்களை, கவனக்குறைவாகவும் பொறுப்பற்ற முறையிலும் வாகனத்தைச் செலுத்தி மோதித் தள்ளியதாகக் கூறப்படும் மோட்டார்சைக்கிளோட்டி நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார் !

எனினும், அவர் தம்மீதான குற்றச்சாட்டை மறுத்து, விசாரனை கோரினார்.

---------

மற்றொரு நிலவரத்தில், BUKIT MERTAJAM-மில் , நான்கு பெண்கள் சிறுநீர் கழிப்பதை காணொலியாக பதிவு செய்ததோடு, ஆபாசக் காணொலிகளை வைத்திருந்ததாகவும், இளைஞன் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது !

--------

தொலைக்காட்சி, வானொலியில் செய்தி வாசிக்கும் கனவுடைய, 8 முதல் 12 வயது தமிழ்ப்பேசும் மாணவர்களுக்காக, Astro உலகம் இளம் செய்தி வாசிப்பாளர் தேடலைத் தொடங்கியுள்ளது !

ஐந்து முதன்மை வெற்றியாளர்களுக்கு, தலா ஆயிரம் ரிங்கிட் ரொக்கப் பரிசுடன், Astro செய்திகள் மற்றும் Astro Audio செய்திகளில் செய்தி வாசிக்கும் வாய்ப்பும் கிடைக்கும் ; தமிழ்ச் செய்தி வாசிப்பாளர்களை நேரில் சந்திக்கவும் வாய்ப்பு கிடைக்கும்.

விண்ணப்பிக்கவும், மேல் விவரங்களை அறியவும், Astro உலகம் அகப்பக்கத்தை வலம் வாருங்கள்.

RAAGA Aaha Siranta Isai!