Skip to main content
ஜொகூரில் மேக விதைப்பு !

 

ஜொகூரில் உள்ள 17 அணைகளில், நீர்மட்டம் குறைந்தால், மேக விதைப்பு நடவடிக்கையை மேற்கொள்ள மாநில அரசு தயாராக உள்ளது !

எல் நினோ பருவத்தை எதிர்கொள்ளும் முன்னேற்ப்பாட்டு நடவடிக்கையாக, இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.

எனினும், தற்போது பெரும்பாலான அணைகளில் நீர்மட்டம் நிலையாக இருப்பதால், நிலைமை கட்டுப்பாட்டில் இருப்பதாக மாநில அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அணைகளில் உள்ள நீர், மேலும் ஆறு மாதங்கள் வரை தாக்குப்பிடிக்கும் அளவில் இருப்பதாகவும் அவர்கள் கூறினர்.

இதனிடையே, எல் நினோ பருவம் நவம்பரில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

----------

நாட்டில் சில பகுதிகளில் ஏற்பட்டுள்ள புகைமூட்ட நிலவரத்தைக் காண்போம் !

சரவாக்கில், Serian, Kuching, Sri Aman, மற்றும் Samarahan-னில், காற்றின் தரத்தைக் குறிக்கும் API குறியீடு 200-க்கும் மேல் பதிவாகி, மிக ஆரோக்கியமற்ற நிலையில் உள்ளது.

மற்ற 7 பகுதிகளில் காற்றின் தரம் ஆரோக்கியமற்றதாக இருக்கின்றது.

சிலாங்கூரில் சில இடங்களும் புகைமூட்டமாக உள்ளன,

----------

SMART எனப்படும் மலேசியாவின் 11 பேர் கொண்ட சிறப்பு பேரிடர் உதவி மற்றும் மீட்புக் குழு, நேபாளத்தின் Trishuli Bazar பகுதியைச் சென்றடைந்துள்ளது !

வெள்ளப் பேரிடரால் பாதிக்கப்பட்ட பகுதிகளில், மனிதாபிமான உதவி மற்றும் பேரிடர் மீட்புப் பணிகளை மேற்கொள்ள, அக்குழு அங்கு சென்றிருக்கிறது.
 
அந்தக் குழு, நேபாளத்தில் ஏழு முதல் 10 நாட்கள் வரை தங்கியிருந்து, மீட்புப் பணிகளில் ஈடுபடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

--------

இன்று காலை Rapid KL-இன் LRT சேவையில் கோளாறு ஏற்பட்டதாக வெளியான தகவலை, அந்நிறுவனம் மறுத்துள்ளது !

ரயில் மாறிச் செல்லும் முக்கிய நிலையங்களில், இன்று காலை ஏற்பட்ட கூட்ட நெரிசலுக்கு, எதிர்பாராத வகையில் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்ததே காரணம் என, Rapid KL விளக்கம் அளித்துள்ளது.

---------

பினாங்கில், ferry மற்றும் ரசாயனக் கப்பல் மோதிய சம்பவம் குறித்து, பினாங்கு துறைமுக ஆணையம் முழுமையான விசாரணை நடத்த வேண்டும் என, பினாங்கு பயனீட்டாளர் சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது !

இம்மாத தொடக்கத்தில் நடந்த அவ்விபத்தில், 21 ferry பயணிகள் காயமடைந்தனர். 

RAAGA Aaha Siranta Isai!