
ஆகக் கடைசி தகவல்படி நாட்டில் 24 இடங்களில் காற்றின் தரம் ஆரோக்கியமற்ற அளவில் பதிவாகியிருக்கிறது!
நெகிரி செம்பிலான், ஜொகூர், சிலாங்கூர், மலாக்கா, Putrajaya, KL உள்ளிட்ட தீபகட்பத்தின் பெரும்பாலான மாநிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
ஜொகூர் தான் மிக மோசமாக பாதிக்கப்பட்ட மாநிலமாக இருக்கிறது.
Pasir Gudangகில் API குறியீடு 190ஆக பதிவாகியிருக்கிறது.
-----
இதனிடையே ஜொகூரில் நாளை தொடங்கி மேலும இந்து நாட்களுக்கு பள்ளிகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது!
அண்மைய காற்றின் தரம், சுகாதாரம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களைக் கருத்தில் கொண்டு, மாநில கல்விக்கான செயற்குழு கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.
------
கெடா, பினாங்கு, பேராக், மலாக்கா மற்றும் ஜொகூரில் கனமழை எச்சரிக்கை!
அம்மாநிலங்களின் இன்று நன்பகல் 12 மணி வரை, இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என MetMalaysia கணித்துள்ளது.
------
இதனிடையே கிள்ளான் பள்ளத்தாகில் நேற்று பெய்த கனமழையால், சில இடங்களில் வெள்ளம் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
-----
சிலாங்கூரில் ஏழு எண்ணெய் நிலை மீது உள்நாட்டு வாணிப வாழ்க்கைச் செலவீன அமைச்சு விசாரணையைத் தொடக்கியுள்ளது!
ரோன்95 ரக பெட்ரோலில் தண்ணீர் கலந்திருப்பதாகவும், அது தங்களின் வாகனங்களுக்கு தற்காலிக மற்றும் நிரந்தர பழுதை ஏற்படுத்தியதாகவும் பொதுமக்கள் கொடுத்த 20 புகார்களை அடுத்து, சம்பந்தப்பட்ட நிலையங்களின் எண்ணெயும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.