
ஜொகூர் மாநிலத்தின் 16ஆவது சட்டமன்ற தேர்தலில் அமோக வெற்றி பெற்றுள்ளது தேசிய முன்னணி!
இன்று நடந்து முடிந்த தேர்தலில், அனைத்து 56 இடங்களிலிலும் போட்டியிட்ட BN, அதில் இதுவரை 48டில் வெற்றிப் பெற்றிருக்கிறது.
இந்த மகத்தான வெற்றியைக் கொடுத்த ஜொகூர் மக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொண்ட மாநில MBரும் ஜொகூர் தேசிய முன்னணி தலைவருமான Datuk Onn Hafiz Ghazi, வெற்றியில் திளைத்துவிடாமல், அடுத்த ஐந்தாண்டுகளுக்கு ஜொகூர் மக்களுக்கு சிறந்த சேவையை BN வழங்கும் என உறுதியளித்துள்ளார்.
ஆட்சிமையக்க ஒரு கட்சி அல்லது கூட்டணிக்கு 29 இடங்களே போதுமான நிலையில், அதையும் விட அதிகமாக BN 48 இடங்களில் வெற்றிப் பெற்றுள்ளது.
2022ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் 40 தொகுதிளில் BN பதிவுச் செய்த வெற்றியை விட இது அதிகமாகும்.
இதனிடையே தேசிய முன்னணிக்காகக் களமிறங்கிய அனைத்து நான்கு மஇகா வேட்பாளர்களும் தத்தம் தொகுதிகளில் வெற்றியை ஈட்டியிருக்கின்றனர்.
பெர்லிஙில் P பன்னீர் செல்வம், Kahang தொகுதியில் V Rugendran, Kemelahவில் Raven Kumar Krishnasamy மற்றும் Bukit Batuவில் குமரன் ராமகிருஷ்ணன் தங்களை எதிர்த்து போட்டியிட்ட வேட்பாளர்களைத் தோற்கடித்திருக்கின்றனர்.
மற்றொரு நிலவரத்தில் BNநுக்கு எதிராக அனைத்து 56 தொகுதிகளிலும் போட்டியிட்ட பக்காத்தான் ஹராப்பான் படுதோல்வி கண்டது.
கடந்த முறை13 தொகுதிகளில் வெற்றிப் பெற்ற பக்காத்தான், இம்முறை கிட்டத்தட்ட பாதிக்குப் பாதி தொகுதிகளை இழந்திருக்கிறது.
பக்காத்தான் வெற்றிப் பெற்ற ஏழு தொகுதிகளில் கார்த்தியாயினி ஜெயபாலன் வெற்றிப் பெற்ற Skudai தொகுதியும் அடங்கும்.
மற்றொரு பக்கம் 33 இடங்களில் போட்டியிட்ட பெரிக்காத்தான் நேஷனல் எந்த தொகுதியிலும் வெற்றிப் பெறவில்லை.
இம்முறை அதன் சார்பில் MIPP கட்சியின் ஐந்து இந்திய வேட்பாளர்களும் களமிறங்கியது குறிப்பிடத்தக்கது.
தேசிய முன்னணியின் வெற்றிக்கு பிரதமர் DS Anwar Ibrahim உட்பட பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
அக்கூட்டணியின் வெற்றியை அடுத்து, அடுத்த ஓரிரு நாட்களில் ஆட்சிமையக்க அரண்மனை Onn Hafizசுக்கு அழைப்பு விடுக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.