
Johor, Negeri Sembilan சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, அரசாங்கம் ஒரு சிறப்பு கண்காணிப்புக் குழுவை அமைக்கவுள்ளது !
அக்காலத்தில், இனம், மதம், ஆட்சியாளர்கள் தொடர்பான உள்ளடக்கங்கள் பரவுவதை தடுக்கும் நோக்கில், அக்குழு அமைக்கப்படுவதாக, தொடர்புத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
3R-ரை தொட்டு உள்ளடக்கம் வெளியிடுபவர்கள் மீது நடவடிக்கை பாயும் என அமைச்சு கூறியது.
ஜொகூரில் ஜூலை 11-ஆம் தேதி தேர்தல் நடைபெறும் வேளை, Negeri Sembilan-னில், ஆகஸ்டு 1-ஆம் தேதி நடைபெறுகிறது.
----------
மலேசியாவும், பாலஸ்தீனமும், உயர் கல்வித் துறையில் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த ஒப்புக்கொண்டுள்ளன !
இவ்விவகாரம், மலேசியாவுக்கு மரியாதை நிமித்தமாக வந்த பாலஸ்தீன தூதருடனான சந்திப்பில் பேசப்பட்டதாக, உயர்கல்வி அமைச்சர் Datuk Seri Dr Zambry Abd Kadir தெரிவித்துள்ளார்.
அச்சந்திப்பு, பாலஸ்தீன மாணவர்களுக்கு ஆதரவை வலுப்படுத்துதல், இரு நாடுகளின் பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான கூட்டு வாய்ப்புகளை ஆராய்தல் போன்ற அம்சங்களையும் உட்படுத்தியிருந்தது.
--------
கெடா Gurun-னில் குண்டு வெடித்து உயிரிழந்ததாகக் கூறப்படும் இரண்டு ராணுவ அதிகாரிகளின் உடல்கள், இன்று காலை ராணுவ மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளன !
துப்பாக்கிச் சூட்டுப் பயிற்சியின் போது குண்டு வெடித்ததில் அவர்கள் உயிரிழந்ததாக, முன்னதாக செய்திகள் வெளிவந்தன.
இதனிடையே, பேரரசர் Sultan Ibrahim, அவர்களின் குடும்பத்தினருக்கு, ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொண்டுள்ளார்.
-----------
ஜொகூர் Kota Tinggi-யில், சுரங்கப் பகுதியின் ஆழத்தில் குளித்துக்கொண்டிருந்த இந்தோனேசியர் என நம்பப்படும் ஆடவர், நீரில் மூழ்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளார் !
---------
சிலாங்கூர் சுங்கை பூலோவில் உள்ள நீச்சல் குளத்தில், 4 வயது சிறுவன், சுயநினைவற்ற நிலையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளான் !