Skip to main content
Johor , NS தேர்தல் ; அத்தியாவசிய பொருட்கள் கட்டுப்பாட்டில் !

 

ஜொகூர் மற்றும் நெகிரி செம்பிலான் தேர்தலை முன்னிட்டு, அத்தியாவசிய மற்றும் கட்டுப்பாட்டு பொருட்களின் கையிருப்பு ,போதுமான அளவில் உள்ளது !

தேர்தல் பணியாளர்கள், கட்சி தொண்டர்கள் மற்றும் வாக்காளர்களின் வருகையால், அப்பொருட்களுக்கான தேவை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக, உள்நாட்டு, வாணிப, வாழ்க்கைச் செலவீன அமைச்சு தெரிவித்தது.

இதனால், அத்தியாவசிய பொருட்களின் விநியோகம் மற்றும் சந்தை நிலவரம், தொடர்ந்து கண்காணிக்கப்படும் என்றும் அமைச்சு கூறியது.

----------

இதனிடையே, ஜொகூரில் வாக்களிக்கச் செல்பவர்களுக்காக, KTMB நிறுவனம் கூடுதல் ETS ரயில் சேவைகளை அறிவித்துள்ளது !

இன்று நண்பகல் 12 மணி முதல், அதற்கான டிக்கெட்டுகள் விற்பனைக்கு விடப்பட்டுள்ளன.

அம்மாநிலத்தில், ஜூலை 11-ஆம் தேதி தேர்தல் நடைபெறுகின்ற நிலையில், Negeri Sembilan-னில், ஆகஸ்ட் 1-ஆம் தேதி நடைபெறுகிறது.

---------

பஹாங் பெக்கானில், செல்லுபடியாகாத மருத்துவ விடுப்புச் சான்றிதழ்களை விற்பனை செய்தல் மற்றும் வாங்குதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில், மேலும் நால்வர் கைதாகியுள்ளனர் !

அதன் தொடர்பில் முன்னதாக கைதான தாதியர் உள்ளிட்ட ஐவர், காவல் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

-----------

கோலாலம்பூர் செராசில் உள்ள இடைநிலைப் பள்ளியில், சக மாணவரை தாக்கியதாகக் கூறப்படும் மாணவர், பள்ளியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார் !

கடந்த ஏப்ரலில், அந்த மாணவர், பாதிக்கப்பட்ட மாணவரின் கழுத்தை பின்புறத்திலிருந்து நெரித்ததுடன், அவரை சண்டைக்கு தூண்டும் வகையில் பேசியதாக, காவல்துறை தெரிவித்துள்ளது.

---------

கோலாலம்பூர், கெடா, பேராக் உட்பட சில மாநிலங்களின் பெரும்பாலான பகுதிகளில், இன்றிரவு 7 மணி வரை, இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என, மலேசிய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது !

RAAGA Aaha Siranta Isai!