Skip to main content
காதலியை மடியில் வைத்து பேருந்து ஓட்டிய சாகசம்!

மலாக்கா, ஜாசினில் தனது காதலியை மடியில் அமர வைத்தபடி பேருந்து ஓட்டிய விரைவு பேருந்து ஓட்டுனரும் சம்பந்தப்பட்ட பெண்ணும் நான்கு நாட்களுக்குத் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்! 

வாக்குமூலம் அளிக்க வந்த போது அவரும் சம்பந்தப்பட்ட மாதுவும் கைதானதாக மாவட்ட காவல் துறை தலைவர் தெரிவித்தார்.  

அப்பெண்ணை தனது மடியில் அமர வைத்தபடி, சம்பந்தப்பட்ட ஆடவர் பேருந்து ஓட்டும் காட்சிகள் அடங்கிய காணொலி சமூக ஊடகங்களில் பரவியது. 

-----  

பினாங்கில் லாரி ஓட்டுனர்களுக்கு டீசல் விற்க மறுத்ததாகக் கூறப்படும் RNRரில் உள்ள எண்ணெய் நிலையம் ஒன்று தொடர்பில் விசாரணை தொடங்கியுள்ளது! 

ஆவணன்ங்கள் உள்ளிட்ட சிலவற்றை சோதனயிட்டதில், சம்பந்தப்பட்ட எண்ணெய் நிலையத்தில் டீசல் கையிருப்பு இருப்பது தெரிய வந்துள்ளதாக, உள்நாட்டு வாணிப வாழ்க்கை செலவீன அமைச்சு கூறியது. 

-----  

சிலாங்கூர் ஷா ஆலாமில் மிருகவதை செய்ததாக நம்பப்படும் நபரைக் காவல் துறை கைது செய்துள்ளது! 

சம்பந்தப்பட்ட நபர் நாய் ஒன்றை தண்ணீர் தொட்டியில் மூழ்க வைக்கும் காட்சிகள் அடங்கிய காணொலி சமூக ஊடகங்களில் பரவியது. 

அவரிடமிருந்து மாநில கால்நடை சேவை துறை மூன்று நாய்களையும் பறிமுதல் செய்தது. 

-----

இந்தியா Chattiishgarரில் உள்ள அனல் மின்  நிலையம் ஒன்று ஏற்பட்ட வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 17ஆக உயர்ந்துள்ளது.  

அனல் மின் நிலையத்தில் உள்ள கொதிகலன் குழாய் வெடித்ததில் குறைந்தது 21 பேர் படுகாயம் அடைந்துள்ளதாக காவல்துறை தெரிவித்தது.  

  

RAAGA Aaha Siranta Isai!