Skip to main content
கிள்ளான் மக்கள் சாலையில் கவனம் !

 

கிள்ளான் பள்ளத்தாக்குப் பகுதிகளில், பருவமழைக் காலத்தில் வாகனமோட்டிகள் மிகுந்த எச்சரிக்கையுடன் பயணிக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர் !

குறிப்பாக, வெள்ளம் ஏற்படக்கூடிய 232 இடங்கள் உட்பட, மொத்தம் 56 ஆபத்தான சாலைப் பகுதிகளில், வாகனமோட்டிகள் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாமான் ஸ்ரீ மூடா மற்றும் செக்சன் 7 உள்ளிட்ட பகுதிகள் வெள்ள அபாயம் அதிகமுள்ள இடங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக, சாலைப் பாதுகாப்பு நிபுணர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

வாகனமோட்டிகள் தங்களது வாகனங்கள் நல்ல நிலையில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும், மழை பெய்யும்போது வேகத்தைக் குறைத்து, வெள்ளம் சூழ்ந்த சாலைகளில் பயணிப்பதைத் தவிர்த்துக்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

குறிப்பாக, வெள்ளநீரில் வாகனங்களைச் செலுத்த வேண்டாம் என்றும், வழிகாட்டும் செயலிகளை மட்டுமே நம்பியிருக்காமல், மாற்றுப் பாதைகளைத் தேர்வு செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

---------

இதனிடையே, சிலாங்கூரில் Kuala Selangor மற்றும் ஷா அலாமில் கிட்டத்தட்ட 600 பேர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர் !

பேராக்கில் 400-க்கும் அதிகமானோர் PPS-சில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

---------

இவ்வேளையில், பினாங்கில் நாளை வரை இடியுடன் கூடிய மழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, வெள்ளம் ஏற்படக்கூடிய பகுதிகளில், தீயணைப்பு மீட்புத் துறை, கண்காணிப்பு மற்றும் ரோந்துப் பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளது !

---------

மற்றொரு பக்கம், மலேசிய வானிலை ஆய்வு மையம், புதன்கிழமை வரை கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளதைத் தொடர்ந்து, கிளந்தானில் 9 மாவட்டங்களிலும், பகாங்கில் குவாந்தான், பெக்கான், ரொம்பின் ஆகிய மாவட்டங்களிலும், வெள்ள அபாயம் இருப்பதால், பொதுமக்கள் விழிப்புடன் இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர் !

-------

புரூணை – மிரி எல்லை பகுதியில், 100 கிலோகிராமுக்கும் அதிகமான சியாபு போதைப்பொருளை வைத்திருந்ததன் சந்தேகத்தின் பேரில் கைதான மலேசிய ஆடவருக்கு, ஏற்கெனவே 2 குற்றப் பதிவுகள் இருப்பது தெரியவந்துள்ளதாக, புக்கிட் அமான் தெரிவித்துள்ளது ! 

RAAGA Aaha Siranta Isai!