
சிலாங்கூர் கிள்ளான் பள்ளத்தாக்கில் நாளை தொடங்கி ஜூன் 7-ஆம் தேதி வரை, போக்குவரத்து நெரிசல் ஏற்படலாம் !
வார இறுதி நீண்ட விடுமுறைக்குப் பிறகு, பலர் கிள்ளான் பள்ளத்தாக்குக்குத் திரும்புவதால், சாலையில் கிட்டத்தட்ட 2.2 மில்லியன் வாகனங்கள் பயணிக்கலாம் என, PLUS நிறுவனம் தெரிவித்துள்ளது.
எனவே, வாகனமோட்டிகள் தங்களுடைய பயணங்களைத் திட்டமிட்டு மேற்கொள்ளும்படி, அந்நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது.
---------
நாடு முழுவதும் உள்ள அனைத்து பாலர் பள்ளிகளுக்கும் தரமான வாசிப்புப் பொருட்களை வழங்குவதற்காக, 10 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ளது !
சிறுவயதிலிருந்தே வாசிப்பு ஆர்வத்தையும், ஆயுள் முழுவதும் கற்றல் மனப்பாங்கையும் உருவாக்கும் நோக்கில், இம்முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.
--------
இதனிடையே, வரவு செலவு திட்டத்தில், அரசாங்கம் சிக்கன நடவடிக்கைகளை முன்னெடுத்தாலும், பள்ளி சார்ந்த திட்டங்கள் பாதிப்பின்றி நடைபெறும் என கல்வியமைச்சு தெரிவித்துள்ளது !
புதிய ஆசிரியர்களின் நியமனம், கூடுதல் வகுப்பறைகள் கட்டுமானம், பழுதடைந்த பள்ளிகள் சீரமைப்பு, மாணவர்களுக்கான RMT உணவுத் திட்டம் ஆகியவையே, அத்திடங்களாகும்.
--------
மேலும் சில செய்திகள் சுறுக்கமாக ;
ஜொகூர் Skudai-யில், குடியிருப்புப் பகுதியின் 10-ஆவது மாடியில் இருந்து, புதிதாகப் பிறந்த பச்சிளம் குழந்தையை தூக்கி வீசியதாக, நீதிமன்றத்தில் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை, தாய், ஒப்புக்கொண்டுள்ளார் !
--------
ஜொகூர் Simpang Renggam சாலையில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வரின் உயிரைப் பறித்த சாலை விபத்து தொடர்பான விசாரணையை, கொலை மற்றும் கவனக்குறைவான வாகன ஓட்டத்தால் மரணம் ஏற்படுத்துதல் என்ற பிரிவுகளின் கீழ் வகைப்படுத்தும்படி, சட்டத்துறை அலுவலகம், காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளது !
--------
பினாங்கு NIBONG TEBAL-லில் உள்ள பல்பொருள் அங்காடி கடையில், ஆயுதமேந்திய கொள்ளை சம்பவத்தின் போது, ஆடவர் ஒருவரைக் கத்தியால் தாக்கியதாகக் கூறப்படும் நபருக்கு, காவல்துறை வலை வீசியுள்ளது !