Skip to main content
கள்ள மருந்துகள் விவகாரம் தீர்க்கப்பட வேண்டும்!

 

கள்ள மருந்துகள் அதிகரிக்கும் விவகாரத்தைக் கையாள, மலேசியா வலுவான தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்! 

இது வெறும் விளிம்பு நிலை பிரச்னை அல்ல; மாறாக பொது சுகாதாரத்தையே சீர்க்குலைக்கும் ஆற்றல் உடையது என மலேசிய மருத்துவச் சங்கம் கூறுகிறது. 

2023 முதல் 2025 வரை மட்டும் 108 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான பதியப்படாத மருந்துகள் அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதை அச்சங்கம் சுட்டிக் காட்டியது. 

உலகளவில் மொத்த மருந்து பொருட்களில் போலி மருந்துகள் பத்து விழுக்காட்டை உட்படுத்தியவை என்றும் MMA மேலும் FMTயிடம் கூறியது. 

- 

அத்யிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி ஒரு லட்சத்து 36 ஆயிரம் ரிங்கிட்டை முறைகேடு செய்ததாக தம்மீது மீது சுமத்தப்பட்ட இரு குற்றச்சாட்டுகளை நில அளவை மற்றும் வரைபடத் துறை தலைமை இயக்குனர் மறுத்துள்ளார். 

70 ஆயிரம் ரிங்கிட் பிணையில் அவர் விடுவிக்கப்பட்டுள்ள நிலையில், அவ்வழக்கின் மறு செவிமடுப்பு ஜூன் மாதம் நடைபெறும். 

- 

 

மலேசிய சந்தையில் கள்ளச் சிகரட்டுகள் அறுபது விழுக்காட்டு இடத்தைப் பிடித்துள்ளன! 

 

இதனால் அரசாங்கத்திற்கு செலுத்தப்படாத வரியின் மதிப்பு பல நூரு கோடியை எட்டியிருப்பது அண்மைய கணக்கெடுப்பொன்றில் தெரிய வந்துள்ளது. 

 

- 

 

கெடா Sungai Petaniயில் மது போதையில் லாரி ஓட்டிய நபர் கைதாகியுள்ளார்! 

30 வயது மதிக்கத்தக்க அந்நபர் ஒரு போலி வாகனமோட்டும் உரிமங்களை வைத்திருந்ததும் தெரிய வந்துள்ளது. 

-- 

இசை நிகழ்ச்சிகள், மேடை நிகழ்ச்சிகல் மற்றும் கலாச்சார படைப்புகளுக்கான பாதுகாப்பு கட்டணத்தைக்குறைத்துக் கொண்டுள்ளது KL மாநகர் மன்றம்! 

2027ஆம் ஆண்டின் இறுதி வரை நீட்டிக்கப்பட்டுள்ள Visit Malaysia திட்டத்தின் கீழ், இன்னும் அதிகமான நிகழ்வுகள் தலைநகரில் நடப்பதை ஊக்குவிப்பதே அதன் நோக்கமாகும். 

RAAGA Aaha Siranta Isai!