
கெடா Kepala Batas-சில், கூர்மையான ஆயுதத்தால் கழுத்தில் குத்தப்பட்ட பெண்ணுக்கு, 10 மணி நேரமாக நடைபெற்ற அறுவை சிகிச்சை, நிறைவடைந்துள்ளது !
அவர் தற்போது, தீவிர சிகிச்சை பிரிவில் நல்ல நிலையில் உள்ளார்.
அப்பெண்ணின் கழுத்தில், கூர்மையான ஆயுதத்தால் குத்தியதாகக் கூறப்படும் 32 வயது நபர், ஏறக்குறைய நான்கே மணி நேரத்தில் கைதானார்.
முன்னதாக, அச்சம்பவத்திற்கு, பொறாமை மற்றும் ஒருதலை காதலே காரணம் நம்பப்படுவதாக, செய்திகள் வெளிவந்தன.
பாதிக்கப்பட்ட பெண், தனது காதலை ஏற்றுக் கொள்ளாததால் சினமடைந்து அந்நபர் அச்செயலை புரிந்திருப்பதாக மாநில காவல் துறை தெரிவித்திருந்தது.
---------
Melaka Tengah-வில், E-hailing ஓட்டுநரை தாக்கியதாகக் கூறப்படும் 4 வாலிபர்கள், நாளை வரை தடுத்து வைக்கப்படுகின்றனர் !
உடம்பின் மேற்பகுதிகளில் காயங்களுக்குள்ளான அந்த ஓட்டுநர், பின்னர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.
---------
சிலாங்கூர் கிள்ளானில், மரண விபத்தை ஏற்படுத்தியதாகக் கூறப்படும் வாகனமோட்டுநரின் தடுப்புக் காவல், மேலும் இரு நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது !
கடந்த வெள்ளிக்கிழமை நிகழ்ந்த அச்சம்பவத்தில், இரு பெண்கள் உயிரிழந்த வேளை, அவர்களில் ஒருவரின் 17 வயது மகன் காயத்திற்குள்ளானான்.
---------
உலகளாவிய எரிபொருள் விலை உயர்வால் உருவாகியுள்ள வாழ்க்கைச் செலவின அழுத்தத்தை குறைக்க, இலக்குவைக்கப்பட்ட தலையீட்டு நடவடிக்கைகள் தொடரும் !
மாதத்திற்கு, 300 ரிங்கிட் அளவிலான BUDI MADANI டீசல் உதவித் தொகை மற்றும் தகுதியான பெறுநர்களுக்கு கூடுதலாக இடைக்கால 100 ரிங்கிட் உதவித் தொகை வழங்கப்படுவதும் அதிலடங்கும் என பொருளாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.
--------
ஆண்களுக்கு எதிரான பாலியல் தொல்லை புகார்கள் கூட அதிகரித்து வருவதாகக் கூறிய மகளிர், குடும்ப, சமூக மேம்பாட்டுத் துறை அமைச்சு, அதன் தொடர்பில் தமதமைச்சிடன், ஆயிரத்துக்கும் மேற்பட்ட சம்பவங்கள் பதிவானதாகக் கூறியது.