
நாட்டிலுள்ள கல்விக் கூடங்களில் மிக தூய்மையானவை என தடம் பதித்திருக்கின்றன தேசிய வகை தமிழ்ப்பள்ளிகள்!
நாடு முழுவதும் தாம் பள்ளிகளைக் கண்காணிக்க வரும் ஒவ்வொரு சமயத்திலும், தமிழ்ப்பள்ளிகள் தமது தரப்பை வெகுவாகக் கவர்கின்றன எனக் கூறியுள்ளார் கல்வி அமைச்சர் Fadhlina Sidek.
அதே போல சில பள்ளிகளில் தேசிய மொழி வளமை ஆசிரியர்களிடமும் மாணவர்களிடமும் சிறப்பாக உள்ளது.
சில பள்ளிகள் ஆங்கிலம்; இப்படியாக கிளாந்தான், லங்காவில், ஜொகூர் என எல்லா மாநிலங்களிலும் உள்ள தமிழ்ப்பள்ளிகள் சிறந்த அடைவு நிலையைக் காட்டுவது மகிழ்ச்சியளிப்பதாக அவர் கூறினார்.
------
அரசாங்கத்தின் MediAsas சுகாதார காப்பீடு மற்றும் takaful திட்டத்திற்காக அடிப்படை மாதாந்திர கட்டணமாக 65 ரிங்கிட் விதிக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது!
நடுத்தர வருமானம் பெறும் மலேசியர்களுக்கும் பயன்படும் வகையில் அப்பரிந்துரை அமைவதாக, சுகாதார அமைச்சர் Datuk Seri Dr Dzulkefly Ahmad தெரிவித்தார்.
MediAsas திட்டம் நாடு தழுவிய அளவில் அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்பு, அதன் செயல்திறனை மதிப்பிடுவதற்காக விரைவில் ஒரு பூர்வாங்க செயல்முறைச் சோதனைக்கு உட்படுத்தப்படும் என்றார் அவர்.
------
பொதுச் சேவை ஊழியர்களை உட்படுத்தி அமுலுக்கு வந்த வீட்டிலிருந்து வேலை செய்யும் முறையினால், அரசாங்கம் 73 லட்சம் ரிங்கிட்டுக்கும் மேல் பெட்ரோல் உதவித் தொகை ஒதுக்கீட்டிலிருந்து மிச்சப்படுத்தியிருக்கிறது!
இந்த மூன்று மாதங்களில் மட்டும் நாடு முழுவதும், இந்த கொள்கை அறிமுகத்தினால் 40 லட்சம் லிட்டருக்கு மேல் எரிபொருளும் மிச்சப்பட்டிருப்பதாக, அரசாங்க தலைமைச் செயலாளர் தெரிவித்துள்ளார்.
உலக எரிசக்தி நெருக்கடி காரணமாக நாடு முழுவதும் அரசு ஊழியர்கள், வீட்டிலிருந்து வேலை செய்ய கடந்த ஏப்ரல் தொடங்கி அரசாங்கம் அனுமதி வழங்கியது.
அக்கொள்கை 6 லட்சத்து 59 ஆயிரம் அரசு ஊழியர்களை உட்படுத்தியிருக்கிறது.
-----
சாட்சிப் பாதுகாப்பு சட்டத்திருத்த மசோதாவை மக்களவை அங்கீகரித்துள்ளது!
சாட்சிப் பாதுகாப்புத் திட்டத்தை மேம்படுத்தும் அரசாங்கத்தின் முயற்சியாக அது அமைகிறது.
சட்டப்பூர்வ தகுதி இல்லாத ஒரு சாட்சியின் சார்பாக, ஒரு பெற்றோர் இந்தத் திட்டத்தில் சேர்வதற்கான விண்ணப்பங்களைச் செய்ய அந்த சட்டத் திருத்தத்தம் அனுமதிக்கிறது.
------
11 லட்சத்து 80 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உயர்கல்வி கூட மாணவர்களுக்கு மடானி புத்தகப் பற்றுச் சீட்டு வழங்கப்படுகிறது!
மாணவர்கள் அதனை இன்று காலை 11 மணி தொடங்கி MySiswaPlace தளத்தில் பெற்றுக் கொள்ளலாம்.
நூரு ரிங்கிட் பெருமானமுள்ள அப்பற்றுச்சீட்டைப் பயன்படுத்தி, அவர்கள் இணையத்தில் வாசிப்புப் பொருட்களை வாங்கிக் கொள்ளலாம்.