Skip to main content
கோலா குபு பாரு வெள்ளப்பெருக்கு !

 

சிலாங்கூர், கோலா குபு பாருவுக்கு அருகிலுள்ள Sungai Pertak-கில், வெவ்வேறு குழுக்களைச் சேர்ந்தவர்கள் சிக்கிய 3 திடீர் வெள்ளச் சம்பவங்களில், நீரில் அடித்துச் செல்லப்பட்டதாக நம்பப்படும் எண்மரைத் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது !

மேலும், ஒன்பது பேர் அப்பகுதியில் சிக்கித் தவிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீரில் அடித்துச் செல்லப்பட்டதாக நம்பப்படும் எட்டு பேரில், ஏமன் நாட்டவர்கள் மற்றும் உள்ளூர் மக்கள் அடங்கிய குழுவைச் சேர்ந்த ஒருவர், மேலும், உள்ளூர் மக்களைக் கொண்ட 11 பேர் குழுவில் ஏழு பேரும் இதில் அடங்குவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

---------

சிலாங்கூரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தகுதியுள்ள ஒவ்வொரு குடும்பத் தலைவருக்கும், கூடுதலாக ஒருமுறை சிறப்பு ரொக்க உதவியாக, இன்று முதல் 2,500 ரிங்கிட் வழங்கப்படும் !

வெள்ளத்தால் சேதமடைந்த வீட்டு உபயோகப் பொருட்களை மீண்டும் வாங்குவதற்கும், பாதிக்கப்பட்ட மக்களின் சுமையைக் குறைப்பதற்கும், அவ்வுதவி துணை புரியும் என, பிரதமர்  Datuk Seri Anwar Ibrahim தெரிவித்தார்.

---------

இவ்வேளையில், Kuala Selangor-ரில், 765 பேர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர் !

பேராக்கில், 421 பேர், அப்பேரிடரில் சிக்கி, PPS மையங்களில் தஞ்சம் புகுந்துள்ளனர்.

---------

Mauritius அனைத்துலக விமான நிலையத்தில், மூன்று மலேசியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் !

அவர்களின் பயணப் பைகளில் இருந்து, 76.14 கிலோகிராம் கஞ்சா எனச் சந்தேகிக்கப்படும் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டதே அதற்குக் காரணம்.

---------

இந்தோனேசியாவில் புகைமூட்டத்தால் பாதிக்கப்பட்ட பல பகுதிகளில், 4 லட்சத்துக்கும் அதிகமானோர், கடுமையான சுவாசப் பாதிப்புகளுக்கு உள்ளாகியுள்ளனர் !

அவர்களில் பெரும்பாலானோர் குழந்தைகள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

RAAGA Aaha Siranta Isai!