
கடைகளில் திடீர் விலை உயர்வு குறித்த புகார்கள் எதுவும் இதுவரை பெறப்படவில்லை என உள்நாட்டு வாணிப வாழ்க்கைச் செலவீன அமைச்சு தெரிவித்துள்ளது !
உணவுப் பொருட்களின் விலையும் கட்டுப்பாட்டில் உள்ளதாக, அமைச்சு கூறியது.
உலகளாவிய புவிசார் அரசியல் பதட்டங்களைக் காரணமாகக் கொண்டு, கடை முதலாளிகள் பொருட்களின் விலைகளை அநியாயமாக உயர்த்தாமல் இருப்பதை, அதிகாரிகள் உறுதிச் செய்வர் என அது சொன்னது.
---------
இதனிடையே, உலகளவில் எண்ணெய் விலை உயர்ந்ததைத் தொடர்ந்து, அனைத்து அரசு அலுவலகங்களிலும் கடுமையான மின்சாரச் சேமிப்பு நடவடிக்கைகள் அமல்படுத்தப்படுகின்றன !
குளிரூட்டியின் வெப்பநிலை 24 பாகை செல்சியசுக்கு மேல் மட்டுமே இருக்க வேண்டும் என்பதும் அதிலடங்கும்.
அலுவலகத்தில் குளிர்ச்சியாக இருக்க ஏதுவாக, அரசு ஊழியர்கள் பொருத்தமான உடைகளை அணியவும் அனுமதி வழங்கப்படுகிறது.
--------
மற்றொரு பக்கம், அலுவலகத்திலிருந்து 8 கிலோமீட்டர் தூரத்திற்கு மேல் வசிக்கும் அரசு ஊழியர்கள், வாரத்தில் மூன்று நாட்கள் வீட்டிலிருந்து வேலை செய்ய அனுமதிக்கப்படுகின்றனர் !
இம்மாதம் 15-ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் அம்முறை, கோலாலம்பூர், புத்ராஜெயா, சிலாங்கூர் மற்றும் அனைத்து மாநில தலைநகரங்களில் அமலாக்கம் காணும்.
அதே சமயம், பாதுகாப்பு மற்றும் சுகாதார துறைகளுக்கு, வீட்டில் இருந்து வேலை செய்ய அனுமதி இல்லை ; கல்வித் துறையில் பள்ளி வகுப்புகளில் நேரடியாக ஈடுபடாத அதிகாரிகளுக்கே, வீட்டிலிருந்து பணியாற்ற அனுமதி வழங்கப்படுகிறது.
--------
ஜொகூர் Segamat-டில், மூவரின் உயிரை பலியெடுத்த சாலை விபத்துக்குக் காரணமான டிரேலர் ஓட்டுநர், போதைப்பொருள் உட்கொண்டிருப்பது தெரியவந்துள்ளது !
நேற்று மாலை, ஐவர் பயணித்த வேனுக்குப் பின்னால் சம்பந்தப்பட்ட டிரேலர் லாரி மோதியதில், கனவன் மனைவி உட்பட மூவர் உயிரிழந்தனர்.
--------
பெர்லிஸ் KANGAR-ரில் ambulance வண்டி ஒன்று விபத்துக்குள்ளானதில், நோயாளி உட்பட, அதிலிருந்த ஐவர் காயமடைந்துள்ளனர் !