Skip to main content
குற்றத்தை மறுத்தார் சரவணன்

 

வெளிநாட்டு தொழிலாளர்களை வேலைக்கெடுக்கும் விவகாரத்தில் ஊழல் செய்ததாக, தம்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை முன்னாள் மனிதவள அமைச்சர் DS M சரவணன் மறுத்துள்ளார்!

 

நான்காண்டுகளுக்கு முன்பு தாம் அமைச்சர் பதவியில் இருந்த போது, பத்து லட்சம் ரிங்கிட் கையூட்டு வாங்கியதாக இன்று காலை KL Sessions நீதிமன்றத்தில் அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டது.

 

வெளிநாட்டுத் தொழிலாளர்கள் இட ஒதுக்கீடு தொடர்பில் மூன்று வெவ்வேறு தரப்புகளிடமிருந்து அப்பணத்தை வாங்கியதாக அக்குற்றச்சாட்டில் குறிப்பிடப்பட்டிருந்தது.

 

குற்றம் நிரூபிக்கப்பட்டால், 20 ஆண்டுகள் சிறை, வாங்கிய கையூட்டுத் தொகையை விட ஐந்து மடங்கு குறையாமல் அபராதம் விதிக்கப்படலாம். 

 

------

 

நேப்பால் மற்றும் Tibetடில் பெருவெள்ளம் மற்றும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்டவர்களைத் தேடி மீட்கும் குழு, இரண்டாவது வெள்ள அபாயத்தை அடுத்து எச்சரிக்கையுடன் இருக்கிறது!

அங்குள்ள ஏரியில் நீர் பெருகிக் கொண்டிருக்கும் நிலையில், எப்போது வேண்டுமானாலும் அது கரைபுறளலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

நேப்பாள வெள்ளத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை நானூற்று 60ஐக் கடந்துள்ளது.

ஆயிரத்து முன்னூருக்கும் மேற்பட்டோரைக் காணவில்லை; அவர்களில் 57 பேர் மலேசியர்கள்.

------

நாட்டில் இருபது இடங்களில் காற்றின் தரம் ஆரோக்கியமற்ற அளவில் உள்ளன!

சரவாக், Putrajaya, KL, Selangor, Penang, Perak, Kedah, Negeri Sembilan-னில் அவ்விடங்கள் உள்ளன. 

மிக மோசமாக பாதிக்கப்பட்டது சரவாக்கின் Sri Aman; அங்கு API குறியீடு 195ஆக உள்ளது. 

200ஐத் தொட்டால் அது மிக மோசமான இடமாக வகைப்படுத்தப்பட்டுவிடும். 

------

மற்றொரு நிலவரத்தில் சரவாக் Lubok Antuவில் 30 பள்ளிகள் இன்று தொடங்கி தற்காலிகமாக மூடப்படுகிறது! 

 

காற்றின் தரம் மோசமாக இருப்பதால், மாணவர்களின் நலனை முன்னிறுத்தி மாநில கல்வித் துறை அம்முடிவை அறிவித்துள்ளது. 

 

-----

இதனிடையே மெர்டேகா சதுக்கத்தில் அட்டவணையிடப்பட்டிருந்த 69ஆவது தேசிய தின கொண்டாட்டம் உள்ளரங்கிற்கு மாற்றப்பட்டுள்ளது!

 

புகைமூட்டம் மோசமாவதால் வரும் 30ஆம் தேதி நடைபெறவுள்ள அந்த தேசிய தின அணிவகுப்பு Putrajaya அனைத்துலக வானிப மையத்தில் நடைபெறும் என தொடர்புத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

RAAGA Aaha Siranta Isai!