
நாட்டில் குடும்ப வன்முறைச் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது !
இவ்வாண்டு ஜனவரி முதல் செப்டம்பர் வரை, PDRM-மில் மொத்தம் 5,862 குடும்ப வன்முறைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
கடந்தாண்டு, நாட்டில் குடும்ப வன்முறைச் சம்பவங்கள், 3.9 விழுக்காடு அதிகரித்து, 7,391 சம்பவங்களாகப் பதிவாகியுள்ளதாக, மகளிர், குடும்ப, சமூக மேம்பாட்டுத் துறை அமைச்சு தெரிவித்தது.
அது முந்தைய ஆண்டில் பதிவான, 7,116 சம்பவங்களைக் காட்டிலும் அதிகமாகும் என, அமைச்சு கூறியது.
ஒவ்வொரு சம்பவத்திலும், மகளிர், குழந்தைகள் உள்ளிட்டோர், பாதுகாப்பும் ஆதரவும் தேவைப்படும் நிலையில் இருக்கின்றனர் என அவ்வமைச்சு கூறியது.
குடும்ப வன்முறை என்பது, உடல் ரீதியான தாக்குதல்களுடன், மன ரீதியான துன்புறுத்தல், மிரட்டல் மற்றும் நிதிக் கட்டுப்பாடுகளையும் உட்படுத்தியது என அது சொன்னது.
--------
Negeri Sembilan சிரம்பான் Rasah Jaya-வில், முதியவர் ஒருவர் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் தொடர்பில், கொலை வழக்காகக் காவல்துறை விசாரணையைத் தொடங்கியுள்ளது !
சக்கர நாற்காலியில் அமர்ந்தவாறு இருக்கும் 60 வயதுடைய முதியவர், சிலரால் தாக்கப்படும் காட்சிகள் கொண்ட காணொலி டிக்டோக்கில் பரவியது.
அதைத் தொடர்ந்து, 2 பெண்கள் மற்றும் ஓர் ஆடவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
-------
கோலாலம்பூர் Bandar Tasik Selatan-னில், வியாபார விவகாரம் தொடர்பில் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டைத் தொடர்ந்து, ஒருவரை அறைந்ததுடன், கத்தியைக் காட்டி மிரட்டியதாகச் சந்தேகிக்கப்படும் ஆடவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் !
----------
மலாக்காவில், இணையம் வழி, காதல் மோசடி மற்றும் இல்லாத கிரிப்டோகரன்சி பரிவர்த்தனைகள் மூலம் மோசடியில் ஈடுபட்டு வந்த கும்பல் ஒன்றை, காவல்துறை முறியடித்த நிலையில், 13 வெளிநாட்டினர் கைதாகியுள்ளனர் !
---------
தீபாவளித் திருநாளை முன்னிட்டு, இன, மத வேறுபாடுகளைக் கடந்து மலேசியர்கள் நல்லிணக்கம், பரஸ்பர மரியாதை மற்றும் அன்புடன் ஒற்றுமையாக வாழ்ந்து நாட்டின் தனிச்சிறப்பைப் பாதுகாக்க வேண்டும் எனப் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வலியுறுத்தியுள்ளார் !