
குடும்ப வன்முறை, இனி தனிப்பட்ட விஷயமாகக் கருதப்பட முடியாது ; அது ஒரு குற்றமாகும் !
மகளிர், குடும்ப, சமூக மேம்பாட்டுத் துறை அமைச்சு திட்டவட்டமாகக் கூறியுள்ளது.
கெடா, சுங்கை பட்டாணியில், பெண் ஒருவர் கருச்சிதைவுக்கு ஆளாகும் அளவுக்கு, தனது கணவரால் அடித்து துன்புறுத்தப்பட்ட சம்பவத்தை அடுத்து, அவ்வமைச்சு அவ்வாறு கூறியது.
சம்பந்தப்பட்ட கணவருக்கு எதிராக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கை குறித்து பேச, நாளை கூட்டம் ஒன்று நடைபெறும் என அமைச்சு சொன்னது.
-----------
சிலாங்கூர் சுல்தானைப் பற்றி அவதூறு பரப்பும் வகையிலான சமூக ஊடக பதிவு குறித்த விசாரணையை, புக்கிட் அமான் கையில் எடுத்துள்ளது !
அதன் தொடர்பில் சில காவல்துறை புகார்களும் பெறப்பட்டுள்ளதாக, மாநில காவல்துறை தலைவர் தெரிவித்துள்ளார்.
அவ்விவகாரம் குறித்த விசாரணை அறிக்கையும் திறக்கப்பட்டுள்ளது.
-----------
நீடித்து வரும் வெப்பம் காரணமாக, காற்றோட்டம் குறைவாக உள்ள வகுப்பறைகள், மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் ஏற்ற சூழல் அல்லாத இடமாக மாறக்கூடும் !
அதனால், வகுப்பறைகளின் காற்றோட்ட அமைப்புகளை மேம்படுத்தும் நடவடிக்கைகள் அவசியம் என, மலேசிய ஆசிரியர் சங்கமான KONGRESS, Harian Metro-விடம் தெரிவித்துள்ளது.
மாணவர்களும் ஆசிரியர்களும் உடல் நலப் பிரச்சினைகளை சந்திக்கும் அபாயத்தைக் குறைக்க, இந்த விஷயத்தில் பள்ளிகள் தீவிரமாக கவனம் செலுத்த வேண்டும் என அது வலியுறுத்தியது.
----------
இவ்வேளையில், கோலாலம்பூர் உள்ளிட்ட சில மாநிலங்களில் 16 பகுதிகளில், முதற்கட்ட வெப்ப எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது !
அப்பகுதிகளில், தொடர்ந்து 3 நாட்களுக்கு வெப்பம், 35 முதல் 37 பாகை செல்சியஸ் வரை பதிவாகும் என, Met Malaysia தெரிவித்துள்ளது !
--------
சிலாங்கூரில் வெவ்வேறு இடங்களில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளில், வணிக குற்றங்களில் ஈடுபட்டதாக நம்பப்படும் நான்கு கும்பல்களை, காவல்துறை முறியடித்துள்ளது !